உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/612

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்டென்

572

ஆர்திகோ இராபர்ட்டோ

(Bal Mokand), பசன்ட்டுகுமார் (Basant Kumar) என்னும் நால்வர் மீது சுமத்தி, அவர்களைக் கைது செய்து மரண தண்டனை விதித்தார். இவரது காலத்தில் தொழில் முன்னேற்றம் அடைந்தது. இந்தியா 1914-இல் முதல் உலகப் போரில் இங்கிலாந்திற்கு உதவி செய்தது. ஆர்டிஞ்சு, 1916-ஆம் ஆண்டு பதவி விலகி இங்கிலாந்து சென்றார். அங்கு 1944-ஆம் ஆண்டு தம் 86-ஆம் வயதில் இறந்தார்.

ஆர்டென், வடக்குப் பிரான்சு, பெல்சியம் இலக்சம்பர்க்குப் பகுதியிலுள்ள மலையும் காட்டுப் பகுதியுமாகும். ஆர்டென் (Ardennes) காடுகளில் மிகப்பெரிய ஓக்கு மரங்களும் பீச்சு மரங்களும் பெருமளவில் வளர்கின்றன. மலைகள் 488 மீ. உயரமுள்ளவை. இப்பகுதியின் வடக்கே இரும்பு, நிலக்கரி, உப்பு ஆகியவை கிடைக்கின்றன. உரோமர்கள் இப்பகுதியை அர்தியினா (Arduenna) எனக் குறித்தனர். இங்குப் பியூசு ஆறு பாய்கிறது.

ஆர்த்தாசர்சிசு என்றும் பெயர் அர்த்தச் சந்திரா என்பதன் சிதைவு. இப்பெயரைக் கொண்ட பாரசீக மன்னர்கள் பலருண்டு.

முதலாம் ஆர்த்தாசர்சிசு (Artaxerxes I) என்னும் பெயர்கொண்ட இவரை மாக்ரோகீர் அல்லது நீண்ட கைகளைக் கொண்டவர் என்றும் கூறுவர். இவர் கி.மு. 464-இல் தம் தந்தை சர்சிசுக்குப் (Xerxes) பிறகு அரசரானவர். பாக்டீரியாவிலும் எகிப்திலும் எழுந்த கலகங்களை இவர் அடக்கினார். அதீனியர்கள் காலியசு உடன்படிக்கையைச் செய்து கொண்டமையால், பாரசீக அரசர்கள் அரசியல் தந்திரத்தில் தோற்றுப்போய் திரேசு, ஆசியாமைனரின் ஒரு பகுதி போன்ற அயோனிய நகரங்களை இழந்தனர் ஆர்த்தாசச்சிக யூதர்கள்பால் இரக்கம் காட்டினார்.

இரண்டாம் ஆர்த்தாசர்சிசு மன்னரை மெனிமன் (Mnemon) அல்லது சிந்தையுள்ளவர் என்றழைத்தனர். இவர் கி.மு. 404- ஆம் ஆண்டில் தம் தந்தை இரண்டாம் தேரியசை (Darius II) அடுத்துப் பட்ட மெய்தியவர். தம் உடன் பிறந்தவரான இளைய சைரசு கலகஞ் செய்து காலமான பின்னர் இவர் இசுபார்ட்டாவுடன் (Sparta) போரிட்டார். அப்போர் அரசரது ஒப்பந்தப்படி முடிவுற்றது. அதில் பெற்ற வெற்றியில் விளைவாகப் பாரசீகம், ஆசியாவில் கிரேக்கர்களுக்குச் சொந்தமான கிரேக்க நகரங்களையும், சைப்பிரசையும் திரும்பப் பெற்றது. இவராட்சிக் காலம் மாநில ஆளுநர்கள் கலகத்திலேயே கழிந்தது. அவர் கி.மு. 358-இல் காலமானார்.

மூன்றாம் ஆர்த்தாசர்சிசு, மேற்கூறிய மெனிமன் என்பாரின் மகனும் அவரையடுத்துப் பட்டமெய்திய மன்னருமாவார். வரவிருந்த துன்பங்களைத் துடைத்தெறிய முயன்றவர். இவரால் ஆரியாமைனரைச் சார்ந்த கலகக்காரர்கள் தோற்கடிக்கப்பட்டனர். இவர் பின்சீயாவில் மூண்ட கலகமொன்றைக் கிரேக்கர்களின் உதவிகொண்டு அடக்கினார். எகிப்தில் இரண்டாம் நெக்டன்போவின் கலகத்தையும் மெண்டார் என்னும் உரோடிய தளபதியின் உறுதுணையால் முறியடித்து வெற்றி கண்டார். மூன்றாம் ஆர்த்தாசர்சிசுக்கு ஆக்சக என்ற பெயரும் உண்டு. இவருடைய கொடுஞ்செயலால் இவரை அனைவரும் வெறுத்தனர். இவர் பாகேசு (Bagoas) என்பவனால் கி.மு.338-ஆம் ஆண்டில் நஞ்சிட்டுக் கொல்லப்பட்டார்.

ஆர்தர் இங்கிலாந்தை இடைக்காலத்தில் ஆட்சி செய்த புராண அரசர். இவரைப் பற்றிய கதைகள் பல இலக்கியங்களில் வந்துள்ளன. ஆர்தர் (Arther, King) மிக்க திறமையும் அறிவுக் கூர்மையும் உடையவர். இவர் மனைவியின் பெயர் கினிவர் ராணி. இவருக்கு ஆட்சியில் உதவி புரிந்தவர் மெர்லின் என்னும் மந்திரவாதி. இவரது இறப்புக் குறித்து இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன. இவர் தம் மருமகனுடன் நடத்திய போரில் காயமுற்று ஆலலோன் தீவுக்குச் சென்றார் என்பர் சிலர்; உரோமானியர்களை வென்று மேற்கு ஐரோப்பாவைத் தம் வசப்படுத்திப் பின்னர் இறந்தார் என்பர் சிலர். தாமசு மலாரி (Thomas Malori) என்பவர் ஆர்தரைப் பற்றிய கதைகளைச் சேகரித்துக் கி.பி. 1469-ஆம் ஆண்டு எழுதினார். அதற்குப்பின் இவர் கதையை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு கதைகளும், பாடல்களும் எழுந்தன.

ஆர்திகோ இராபர்ட்டோ (கி.பி. 1828-1920): கிரேமோனா (Cremona) என்னும் பகுதியிலுள்ள கேசுடெல் திடோன் என்ற ஊரில் பிறந்தார். இவர் இத்தாலிய நாட்டின் நேர்காட்சிக் (Positivism) கொள்கையில் சிறந்த தொண்டாற்றினார். இவர் ஒரு கத்தோலிக்க மத குருவாவர். பதுவாப் பல்கலைக்கழகத்தில் கி.பி. 1881 முதல் 1909 வரை இத்தாலி நாட்டுத் தத்துவ வரலாற்றினைக் கற்பித்து வந்தார். சிறந்த குறிக்கோள் நெறியின் (Idealism) அடிப்படைக் கருத்துகளை இவர் முப்பது ஆண்டுகள் கற்பித்தார். புலன் நுகர்ச்சியினாலான யாவும் இயற்கைப் பொருள்களும் பொதுப் பொருள்களோடு தொடர்புடையவை; ஆன்மாவும் பொருள்களும் வேறுபட்டவை: புற உறுப்புகளைப் பற்றிய உணர்வுகளும் அவற்றின் புரிந்த நிலையும் பலவகையான இணைப்புகளுடன் தொடர்புடையவை என்பன போன்ற கொள்கைகளை இவர் தெளிவு படுத்தினார்.