உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/629

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆராய்ச்சி முறைகள்

589

ஆராய்ச்சி முறைகள்

களை மூவழிகளில் கட்டுப்படுத்த முடியும். ஒன்று, ஆராய்ச்சிக் காலத்தில் மாறுபடாத ஒரே நிலையில் கட்டுப்படுத்தலாம். இரண்டு, ஆராய்ச்சிச் சூழலில் புகாதவாறு மாறிகளைப் புறத்தே நிறுத்தலாம். மூன்று, ஆராய்ச்சிக்கு உட்படுவோரைத் (உட்படு பொருளை) தேர்ந்தெடுப்பதில் ஓவ்வொருவருக்கும் உள்ள சம வாய்ப்பமையும் முறையைப் பயன்படுத்தலாம்.

சோதனை முறையில் பல அமைப்புகள் (Designs) உள்ளன. எளிய சோதனையில் ஒரு தன்னியல் மாறியும் ஒரு சார்புடை மாறியும் இருக்கும். பிற மாறிகள் கட்டுப்படுத்தப்படலாம்; மாறாகவும் இருக்கலாம். சோதனை விலைவுகளை நன்கு கண்டறியச் ‘சோதனைக்குழு’ (Experimental Group), ‘கட்டுள்பட்ட குழு’ (Control Group) என இரு குழுவினைப் பயன்படுத்தலும் உண்டு. சோதனைக் குழு, தன்னியலான மாறியின் மாறுபாடுகட்கு உட்படுத்தப்படும். கட்டுள்பட்ட குழுவுக்கு இவ்வுட்படுத்தல் (Treatment) இல்லை. பின் இரு குழுக்களிலும் சார்புடை மாறியின் அசைவுகள் கண்டறியப்படும். இவ்வளவுகளில் உள்ள வேறுபாடு, தன்னியல் மாறியின் மாறுபாடுகளால் விளைந்தது என முடிவு செய்யப்படும்.

இவ்வெளிய சோதனை, ‘இரு குழு முன் சோதனை - உட்படுத்தல் பின் சோதனை’ (Two-Group Pretest - treatment - Posttest) எனப் பெயர் பெறும். இவ்வமைப்பைப் பின்வருவாறு குறித்துக் காட்டலாம்.

குழு முன்சோதனை உட்படுத்தல் பின்சோதனை

சோ சோ₁ சோ₂
சோ₁ - சோ₂

(சோ- சோதனைக்குழு, க-கட்டுள்பட்ட குழு, சோ₁-சோதனை, சோ₂-சோதனை, உ-உட்படுத்தல்) தன்னியலான மாறியின் வேறுபாடுகள், சார்புடை, மாறியில் உண்டாக்கிய விளைவால் (சோ₂-சோ₁) அளந்தறியப்படும். இவ்விளைவு, சோதனைக் குழுவிற்குக் கட்டுள்பட்ட குழுவைக் காட்டிலும் மிகுந்திருப்பின், சார்புடைமாறி தன்னியலான மாறியின் மாறுபாடுகளால் பாதிக்கப்படுகிறது என முடிவு செய்யலாம்.

காரணம்-விளைவு (Cause-Effect) ஆய்வு முறையில், இது காரணம், இது விளைவு என நிலை நிறுத்தப்பெறும். இம்முறையில் காணப்படும் விளைவுகட்குக் காரணமாய் அமைந்த காரணிகள், எவையெனக் கண்டறியப்படும். மாணவரிடையே காணப்படும் அமைதியின்மைக்குக் காரணங்கள் யாவை என ஆராய்தல் இவ்வகையில் அடங்கும். கடந்த காலத்திருந்த காரணிகளின் பின் விளைவால் இப்போதுள்ள நிலை ஏற்பட்டது என முடிவு காணுதல், பின் விளைவு ஆய்வு (Ex-post facto) முறை எனப் பெயர் பெறும்.

தொடர்பாய்வு முறை இரு மாறிகட்கிடையே மாறுபாடுகளின் இணைந்த தன்மையை (Covariance) ஆராயும். இணைந்து மாறுபடும் தன்மையின் அளவைத் தொடர்புக் குழு (Correlation Coefficient) வாக அளந்து காட்டும். ஒன்றுக்கு மேற்பட்ட மாறிகளிடையே காணப்படும் தொடர்பை, மடங்கு (Multiple) அல்லது பகுதித் (Partial) தொடர்பு வாயிலாக விளக்கலாம். தொடர்பாய்வு, மாறிகட்கிடையேயுள்ள தொடர்பினையே விளக்கும்; காரண காரிய விளைவுகளைக் காட்டாது.

செயலாய்வு என்பது ஓர் உடனடிச் சூழலில் எதிர்ப்பட்ட சிக்கலுக்குத் தீர்வு கண்டு, அத்தீர் வினைச் செயற்படுத்தச் செய்யும் முயற்சியாகும். இவ்வாய்வு, குறிப்பிட்ட ஒரு சூழலுக்கு மட்டுமே பொருந்துவதாய், உடன் பயன்படத்தக்கதாய்ச் சிறிய அளவினதாய் அமையும்; செயலறிவு படைப்பதாய் அமையும். இவ்வாய்வின் முடிவுகளைப் பொதுமையாக்க முடியாது. அறிவியல் அடிப்படையில் இவ்வாய்வு வலிவற்றது. எனினும், ஆராய்ச்சித் திறன் இல்லாதவர் கூடத் தம் செயற்பாடுகளில் எதிர்ப்படும் எளிய சிக்கலுக்கு நேரிய முறையில் தீர்வு கண்டு, உடன் செயலாக்கி, சிக்கலைத் தீர்த்துக் கொள்ள இம்முறை பயன்படும்.

சமூகவியலில் மூவழி ஆய்வு (Triangulation) என்பது, ஏதாவது ஒரு சிக்கலுக்குத் தீர்வுகாண இரண்டுக்கு மேற்பட்ட முறைகளைப் பயன்படுத்துவதாகும். ஒரு கருத்தினைப் பல வழிகளில் அளந்தறிவதும், ஒரு நிகழ்ச்சியினைப் பலவாறு உற்று நோக்கியறிவதும் அவற்றை முழுமையாகக் காண உதவும். மூவழி ஆய்வு, பயன்படுத்தும் முறைகளின் பன்மை (Plurality) கொண்டுமட்டும் அமைய வேண்டு மென்பதில்லை. காலப்பன்மையும் (Time) இடப்பன்மையும் (Space) கொண்டும் அமையலாம். சமுதாய மாற்றங்கள் உண்டாகும் பாங்கினை ஆய்ந்தறியக் காலம் கொண்ட மூவழி ஆய்வு பெரிதும் உதவும். காவப் போக்கின் மீட்சி, குறுக்குவெட்டு முறைகளில் பெற்ற விவரங்களைக் கூட்டிப்பகுத்தல் ஆகிய முறையில் ஆய்வு நிகழ்த்துவர். ஒரு நாட்டில் காணப்படும் வெவ்வேறு இன உட்குழுக்களிடையே அமையும் பண்பாட்டு வேறுபாடுகள், வெவ்வேறிடங்களில் வளர்ந்து வந்துள்ள பண்பாடுகளுக்கிடையே குறிப்பிட்ட நடைமுறைகளில் காணப்படும் வேறுபாடுகள் முதலானவற்றை ஆராய்ந்தறிய இடப்பன்மை மூவழி ஆய்வு (Space Triangulation) முறை பயன்படும். ஆய்வுக்கான விவரங்களைத் தனிவிவரக் கூட்டுநிலை-