உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/632

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆராய்ச்சியும்.....

592

ஆராய்ச்சியும்.....

ஆய்வு முன்னேற்றத்தால் விளையும் பலன்கள் பயனுள்ளவையாகவும் பயனற்றவையாகவும் காணப்பட்டாலும், அவை ஒருகாலும் முடிவுற்றவையல்ல. ஆய்வுகளின் முடிவு, ஒருவருக்கோ பலருக்கோ உடனடியாகவோ குறுகிய நீண்ட கால இடைவெளிக்குப் பின்போ பலன் அளிக்கலாம். ஆய்வின் விளைவுகளைப் பலர் நுகர்வதின் காரணமாகவோ பிறர் அறிவதின் காரணமாகவோ அவற்றின் தன்மையும் தரமும் அளவும் குறைந்துவிடாமல், சுற்று வட்டாரத்தில் பரவப் பரவ அவை முடிவற்றதாய் மேலும் மேலும் வளர்ந்துகொண்டே போகும்.

நாடுகளிடையே காணப்படும் சமநிலையற்ற ஆய்வு முன்னேற்றத்தைச் சமநிலைப்படுத்த நுட்ப இடமாற்றம் (Transfer of Technology), வருங்காலப் பொருளாதார முன்னேற்றத்திற்கு இன்றியமையாதது. உலக ஆய்வு முன்னேற்றத்தில் 97 விழுக்காடு, அமெரிக்க ஐக்கிய நாட்டில் மட்டும் செறித்து காணப்படுகிறது. நாட்டின் மொத்த வருமானத்தில் (GNP) அமெரிக்கா 2. 2 விழுக்காடும், உருசியா 3.1 விழுக்காடும், மேற்குச் செர்மனி 2, 4 விழுக்காடும், சப்பான் 1. 9 விழுக்காடும் செலவு செய்கின்றன. ஆனால், வளர்ச்சியடையும் நாடுகளின் செலவு, நாட்டு வருமானத்தை நோக்கும்போது மிகக் குறைந்த அளவில் உள்ளது. பின்தங்கிய நாடுகளுக்கு (Least Developed Countries) வளர்ச்சியடைந்த நாடு செய்கள், தங்கள் நுட்ப அறிவை இடப்பெயர்வு செய்தால் பல நாடுகள் வறுமை நிலையிலிருந்து பொருளாதார முன்னேற்றப்பாதையை அடைய இயலும். ஆனால், வளர்ச்சியடைந்த நாடுகள், தங்களுக்குத் துணையான பயன்களை அடையவும், உதவிபெறும் நாடுகளின் மேல் தங்கள் அதிகாரம், கட்டுப்பாடு ஆகியவற்றைச் செலுத்தவும் முடிந்தால் மட்டுமே நுட்ப ஆய்வு அறிவை இடப்பெயர்வு செய்ய முன் வருகின்றன. மேலும் மூலப் பொருள்களைப் பெறவும் அரசியல் உரிமை செலுத்தவும் உற்பத்திப் பொருள்களை விற்கவும் தங்கள் நலன்களை நிறைவேற்றவும் மட்டுமே மறைமுகமாக ஏழைகளின் பொருளாதார முன்னேற்றத்தில் பங்கேற்று, தொழில் நுட்ப இடமாற்றங்களுக்கு இசைவளிக்கின்றன.

பின்தங்கிய நாடுகளின் சமூகப் பண்பாடுகளும் பொருளாதார ஆக்கமுறைகளும், அடிப்படையில் திடீரென அயல்நாட்டு நுட்ப முறைகளை ஏற்றுக்கொள்ளும் தகுதியற்றதாகப் பல சிக்கல்களையும் முரண்பாடுகளையும் விளைவிக்கக் கூடியளையாக இருக்கின்றன. எத்தகைய அயல்நாட்டு நுட்பமுறைகள் எந்த அளவுக்கான வேகத்தில் எந்தெந்த துறைகளில் புகுத்தப்பட வேண்டும் என்பதிலும் முடிவுகள் எடுக்கப்படுவதில் முன் கவனமும், திட்டமும் ஆய்வும் மிகத் தேவை பல நாடுகளின் அனுபவமும் விளைவுகளும் அதனைப் பற்றிய முடிவான கருத்துகளை வெளிப்படுத்த இயலாத நிலையிலேயே உள்ளன.

இந்தியா, விடுதலையடைந்த காலத்திலிருந்து ஐந்தாண்டுத் திட்டங்களின் வாயிலாகப் பொருளாதார முன்னேற்றத்தை, அறிவியல் - வாழ்வியல் ஆய்வு வளர்ச்சியின் வாயிலாகப் பெறத் திட்டமிட்டுச் செயற்படுகிறது. இந்தியப் பொருளாதாரம் தானியங்கக் கூடியதாகவும் தன்னிறைவுள்ளதாகவும் செயற்பட வேண்டும் என்பதே திட்டங்களின் சிறப்பு வகையில் நோக்கமாகும். அதை நிறைவேற்றும் நாட்டின் வாணிகம், சமூக அரசிறைக் கொள்கைகள் ஆகியவை பின்பற்றப்படுகின்றன. அயல்நாட்டு உதவியைச் சார்ந்திருப்பதைத் தவிர்க்க இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு ஈடான மாற்றுப் பண்டங்களை நாட்டில் உற்பத்தி செய்வதை ஊக்குவிப்பதற்காகப் பல ஆய்வுகள் செய்யப்படுகின்றன. தொழிலகங்களுக்கும் தனியார் துறைகளுக்கும் இறக்குமதிப் பதிலீட்டுப் பொருள் (Import Substitution Goods) கண்டுபிடிப்புகளுக்காக அரசு நிதி உதவி வழங்குகிறது.

ஆராய்ச்சி வசதிகளுடன் இந்தியாவில் 135 பலகலைக் கழகங்களும் 5 மகத்தான தொழில்நுட்ப மண்டல நிறுவனங்களும் 150 தொழில்நுட்பக் கல்லூரிகளும் 100 மருத்துவக் கல்லூரிகளும் 200 ஆய்வுக் கூடங்களடங்கிய தனித்துறை ஆய்வு (Specialized Research) நிறுவனங்களும் அரசின் நிதிக்கொடைக் கட்டுப்பாட்டுத் துணையுடன் நிறுவப்பட்டுள்ளன. தனியார் துறையில் 700 தொழிலகங்களில் ஆய்வு முன்னேற்றத்திற்கான நுட்ப வசதிகள் உள்ளன. நாட்டு மொத்த வருமானத்தில் 6 விழுக்காடு அறிவியல் நுட்ப ஆய்வுக்காக மட்டில் செலவிடப்படுகிறது. இன்றைய உலக அறிவியல் அறிஞர்களுள் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியர்கள் என்றாலும், இந்திய மக்கள் தொகையோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது அது வியப்பிற்குரியதன்று.

நாட்டின் வறுமை, ஏழைமை, வேலையில்லாத்திண்டாட்டம், சமனற்ற வருமானப் பகிர்வு (Inequality), சமுதாயத்திலுள்ள ஏற்றத் தாழ்வுகள், பிரிவினைகள், மக்கள் பெருக்கம் போன்ற சிக்கல்களை ஆராய்ந்தால், இன்னும் மிகையான ஆய்வினை முன்னேற்றத்திற்காக இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்பது தெளிவாகிறது. முன்னேற்றமடைந்த நாடுகளின் தொழில்நுட்ப அறிவையும் வாழ்க்கைத் தரத்தையும் ஒப்பிட்டால் உயர்ந்த மேலோட்ட ஆய்வுகள் மட்டுமல்லாமல், பொது மக்களின் நலனைப் பாதிக்கும் தண்ணீர், நாட்டு மருத்துவம் (Indigenous Medicine), மக்கள் திறன் வளம் (Manpower-