ஆல்டாமிரா
615
ஆல்டாய்
மொராக்கோவின்மீது தமக்குள்ள உரிமைகளை நிலைநாட்டும் வகையிலும், ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்குப் புத்தி புகட்டும் முறையிலும், 1905-ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 31-ஆம் நாளன்று தாஞ்சியர் (Tangir) கரையிலே இறங்கி முகாமிட்டு, மொராக் கோவை ஒரு சுதந்திர நாடாகத் தாம் மதிப்பதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு ஆல்சசிராசு மாநாட்டிற்கே ஒரு நல்ல முடிவைத் தந்ததாக அமைந்துவிட்டது. மாநாட்டிற்கு வருகை தந்த அனைத்து உறுப்பினர்களும் மொராக்கோவின் சுதந்தரத் தன்மையையும், சுல்தானின் தலைமையையும் முழுக்க முழுக்க ஏற்றுக் கொள்வதாகவும் முடிவெடுத்தனர். அனைத்து ஐரோப்பிய நாடுகளும் அந்நாட்டில் சம உரிமையுடன் வாணிகத்தில் ஈடுபடலாம் எனவும், பிரான்சு, இசுபெயின் ஆகிய நாடுகள் காவல்துறை உதவியுடன் மொராக்கோவின் அமைதியைக் காக்க வேண்டுமெனவும், மொராக் கோவின் வளர்ச்சிக்கு வேண்டிய சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டுமெனவும், அந்நாட்டின் நிதி வளர்ச்டிக்காகத் தாஞ்சியரில் ஒரு வங்கி ஏற்படுத்துவதெனவும், அவ்வங்கியில் மற்ற நாடுகளைவிடப் பிரான்சு மிகுதியான மூலதனம் போடலாம் எனவும் முடிவு செய்யப்பட்டது. இம்முடிவினால் செருமனி, பிரான்சு ஆகிய இரண்டு நாடுகளுக்குமே ஓரளவுக்கு மனநிறைவு ஏற்பட்டது; மொராக்கோ நாடும் சுதந்தர நாடாக ஆயிற்று.
ஆல்சிராசு நகரின் மக்கள்தொகை 1940-ஆம் ஆண்டில் 20,226 எனவும், 1981-ஆம் ஆண்டில் 86,042 எனவும் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
பொன்.சு.
ஆல்ட்டாமிரா வட இசுபெயினிலுள்ள (Spain) சண்டாண்டர் (Santander) மாநிலத்திற்கு மேற்கே 30 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள குகையில் வரலாற்றுக்கு முந்திய கடைக் கற்கால ஓவியங்கள் காணப்படுகின்றன. இக்குகை கி.பி.1868-ஆம் ஆண்டு ஒரு வேடரால் கண்டுபிடிக்கப்பட்டது. சண்டாண்டர் நகரைச் சார்ந்த மார்சிலினோ-டி-செனடோலா (Marcelino-de-Sautola) என்ற பிரபு கி.பி. 1875-ஆம் ஆண்டு இக்குகையைப் பார்வையிட்டு, இதன் அருகில் எலும்புகளையும் கற்கருவிகளையும் கண்டெடுத்தார். இவர் கி.பி.1879 ஆம் ஆண்டு மறுமுறை தம் மகளுடன் இக்குகையைப் பார்வையிட வந்தார். இவர் மகள் இக்குகையின் மேற்கூரையில் ஒளியங்கள் இருப்பதைக் கண்ணுற்றாள். ஆல்ட்டாமிரா (Altamira) ஓவியங்கள் பற்றிய நூலினைச் சௌடோலா, கி.பி. 1880-ஆம் ஆண்டு வெளியிட்டார். வல்லுநர் பலர் இவ்வோவியங்கள் போலியானவை எனக் கருத்துரைத்தனர். ஆனால் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் அறிஞர் பலர், இவ்வோவியங்கள் வரலாற்றுக்கு முந்திய கற்காலத்தைச் சார்த்தவையே என வலியுறுத்தினர். இக்குகை ஓவியங்களை 1902-ஆம் ஆண்டு பிரான்சுத் தொன்மை வரலாற்றறிஞர்களான காடையில் சுக்கு என்பவரும். பிரூயில் என்பவரும் (Cartailhac and Brevil) ஆய்வு செய்தனர், ஆல்ட்டாமிரா குகை 270 மீட்டர் நீளம் உடையது. குகையின் முன்பகுதியில் வரலாற்றுக்கு முந்திய மனிதன் பயன்படுத்திய பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றுள் அரிக்னேசியன் (Aurignacian), பிந்திய சொலுட்ரன் (Solutrean), முந்திய அல்லது இடை மெக்டலெனியன் (Magdalenian) காலக் கருவிகள் குறிப்பிடத்தக்கன. மேலும் விலங்கின் எலும்பிளால் செய்யப்பெற்று, நன்றாகச் செதுக்கப்பட்ட பட்டைக்கத்திகளும் (Blade) கண்டுக்கப்பட்டன. குகையின் பக்க அறையில் எண்ணற்ற ஓவியங்கள் காணப்படுகின்றன. அவற்றின் நீள அகலங்கள் 18×9 மீட்டர்களாகும். குகையில் மேற்கூரையிலும் வண்ண ஓவியங்கள் உள்ளன. ஓவியங்கள் சிலப்பிலும் கருப்பிலும் செங்கருநீலத்திலுமாகப் பலவண்ணம் பூசப்பட்டுக் காண்பவரைக் கவரும் வண்ணம் உள்ளன. விலங்குகள் பல்வேறு நிலைகளில் தீட்டப்பட்டுள்ள, விலங்குகளுள் காட்டெருமைகள் மிகுதியாக வரையப்பட்டுள்ளன. மற்றும் குதிரைகள், பன்றிகள், பெண்மான் ஆகியவையும் மனிதப்பண்பு ஏற்றப்பட்ட இறை உருவங்கள் எட்டும் தீட்டப்பட்டுள்ளன. இங்கு மற்றும் பல குகை அரங்குகள் உள்ளன. இவற்றிலும் ஓவியங்கள் காணப்படுகின்றன.
ஆல்டாய் மேற்கு ஆசியாவிலுள்ள பெருமலைத்தொடர் ஆல்டாய் மலைத்தொடருக்கும் இமய
ஆல்டாய் மலையிலுள்ள ஓரி