உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/662

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆல்பார்க்கு

622

ஆல்பிரடு மகா

ஆரஞ்சு என்னுமிடத்தில் தச்சுக்காரர்கள் குடியேறினர். பின்னர் இக்கால ஆல்பனிப் பகுதியில் குடியேற்றங்கள் ஏற்பட்டன. ஆங்கிலேயர்கள், இந்நகருக்கு யார்க் பிரபு ஆல்பனி என்பவரின் நினைவாக ஆல்பனி எனப்பெயரிட்டனர். மக்கள் தொகை 1,01,767, (1980).

கனடாவில் ஆல்பனி என்னும் ஓர் ஆறும் உள்ளது. இது சேம்சு ஆற்றுடன் இணைகிறது; நீளம் 640 கி.மீ.

ஆல்பார்க்கு வட தென்மார்க்கின் (Denmark) பொருளாதார மையமான ஒரு நகரம். ஆல்பார்க்கு (Aalborg) இலிம்பியர்டு என்னும் பகுதியில் உள்நாட்டு நகரமாகும். இங்குச் சிமிண்ட்டு, ஆடைகள், சாராயம், இயந்திரங்கள் போன்றவை உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்நகரம் கி.பி. 1342-இஸ் சுதந்திரச் சாசனத்தைப் பெற்றது. இங்குத் தொன்மையான கோட்டையொன்றும் கண்களைக் கவரும் வீடுகளும் உள்ளன. இதன் மக்கள் தொகை 1,54,218. (1982)

ஆல்பாலோங்கா உரோம் நகரத்திற்குத் தென் கிழக்கே இலேசியம் (Latium) மாவட்டத்தில் அமைந்துள்ள தொன்மையான நகரம். ஆல்பன் ஆற்றுக்கும் ஆல்பன் மலைக்கும் இடையே பாறை முகட்டில் அமைந்துள்ள இந்நகரை ஏனியசு (Aeneas) மகன் அசகானியசு (Ascanius) அமைத்தார் என்று கூறுவர். ஆல்பாலோங்கா (Albalonga) வில்தான் உரோமாபுரி நகரை அமைத்த உரோமுலகம் இரீமசும் பிறந்தனர் என்பது கூறப்படுகிறது.

ஆல்பிரடு பூங்கா உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்து மாநகரில் உள்ளது. இங்குத் தான் 1931-ஆம் ஆண்டு பிப்பிரவரி 27-ஆம் நாள் புரட்சி வீரர் சந்திரசேகர ஆசாத்து காவல் துறையினரால் கொல்லப்பட்டார். ஆசாத்து இரு கைகளிலும் துப்பாக்கி ஏந்திக் காவல் துறையினருடன் இறுதி வரை போராடினார். காவல் துறையினருக்கும் ஆசாத்துக்குமிடையே நடைபெற்ற போரில் பல காவல் துறையினர் கொல்லப்பட்டனர்; ஆங்கிலக் காவல்துறைக் கண்காணிப்பாளரான நாட்வாதர் என்பாரும் பிசுவேசு என்ற இந்தியக் காவல்துறை அதிகாரியும் காயமுற்றனர். கைகால்களில் பாய்ந்த குண்டுகளுடன் ஆசாத்து போராடிக் கொண்டே உயிர் துறந்தார். ஆல்பிரடு பூங்காவில் இச்செய்தியை அறிவிக்கும் நினைவுக் கல் ஒன்றுள்ளது.

ஆல்பிரடு, மகா (கி.பி.849-899) இங்கிலாந்தை ஆண்ட தலைசிறந்த மன்னர்களுன் ஒருவர். இங்கிலாந்து மக்களைத் தேனியரின் (Danes) தாக்குதலிலிருந்து காப்பாற்றியவர். தேனியரின் தாக்குதலிலிருந்து ஐரோப்பா முழுவதையும் காப்பாற்றிய பெருமை இவரையும் இவர்தம் காலத்தவரான பிரெஞ்சு மன்னர் பாரிசு கவுண்ட்டு (Count of Paris) என்பவரையும் சாரும். இவர் உடன்பிறந்தாரான எதெல்ரெடு (Aethelred) கி.பி. 871 இல் காலமானார். அப்போது ஆல்பிரடு இங்கிலாந்தின் ஒரு பகுதியான வெசெக்சுக்கு மன்னரானார்.

இன்னல் நிறைந்த நேரத்தில் மன்னரான ஆல்பிரடு, தேனியரை எதிர்த்த முதற் கட்டத்தில் வில்டன் (Wilton) என்னும் போர்க்களத்தில் தோல்வியுற்றார். இதனால், தேனியருடன் அமைதி உடன்படிக்கை செய்துகொண்டார். மக்கள் வரிப்பணத்தைத் தங்கமாகத் தேனியருக்குக் கொடுத்தார். இங்கிலாந்தின் வரலாற்றில் அமைதியைப் பெறுவதற்குப் பொருள் கொடுத்த முதல் மன்னர் இவரே. இதன் காரணமாக இவரது நாட்டில் சிறிதுகாலம் அமைதி நிலவியது.

தேனியருக்குப் பாடம் புகட்ட நினைத்த ஆல்பிரடு, தம் கப்பற் படையைப் பலப்படுத்திக் கொண்டு கி.பி. 875-ஆம் ஆண்டு அவர்களைப் போர்முனையில் சந்தித்தார். இப்போரின்போது ஆல்பிரடு தேனியரின் ஏழு கப்பல்களை முறியடித்தார். ஒரு கப்பலைக் கைப்பற்றினார். தேனியர் கி.பி. 876-இல் ஆல்பிரடைத் தோற்கடிக்கும் முயற்சியில், வெசெக்சைக் கைப்பற்றினர். விழிப்பாக இருந்த ஆல்பிரடு அவர்களை வேர்காம் (Warham) என்னுமிடத்தில் முற்றுகையிட்டார். சூழ்நிலையைப் புரித்துகொண்ட தேனியர் தலைவன் கத்ரம் (Guthrum), ஆங்கிலேயர் பொருள் கொடுப்பின் பின்வாங்குவதாக வாக்குறுதியளித்தான். ஆனால், அவ்வாக்குறுதியை அவன் காப்பாற்றவில்லை. போர்வெறி கொண்ட அவன் எக்சிடார் (Exeter) பகுதியைக் கைப்பற்றி வெசெக்சைத் தாக்க முயன்ற நேரத்தில் கொடும்புயல் ஒன்று வீசி, தேனியப் படைகளை அலைக்கழித்து மாய்த்தது. எஞ்சியிருந்த வீரர்களை ஆல்பிடின் கப்பற்படையினர் சூழ்ந்து கொண்டனர். பலமாத கால முற்றுகைக்குப் பின்னர்க் கி.பி. 877-இல் தேனியர் தோற்கடிக்கப்பட்டனர்.

தேனியர் மீண்டும் இங்கிலாந்தைத் தாக்கும் பொருட்டு, கி.பி 878-ஆம் ஆண்டு சனவரித் திங்கள் தொடக்கத்தில், 23 கப்பல்களுடனும் 1200 படை வீரர்களுடனும் வெசெக்கில் உள்ள சிப்பன்காம் (Chippenbam) நகர் நோக்கி விரைந்தனர். வெசெக்க எதிரியின் கையில் வீழும் நிலையேற்படவே, ஆல்பிரடு சாமர்செட்டு சதுப்பு நிலங்கட்குச் சென்று, அங்கு அத்லனி (Atheleny) என்னும் இடத்தில் கோட்டை ஒன்று கட்டினார். அங்கிருந்துகொண்டு தேனியர்கனை முற்றுகையிட்டார். தேனியர்கள் எடிங்டன் (Edington) என்னுமிடத்தில் தோற்கடிக்கப்பட்டனர்.