ஆலம்பூர்
630
ஆலம் பெர்ட்டு சீன்
திரை ஆறு கிருட்டிணா ஆற்றுடன் கலக்கும் இடத்திற்கு அருகில் உள்ளது. இங்கு 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல கோவில்கள் உள்ளன. இவை முற்கால மேலைச் சாளுக்கியரின் கோயிற் கட்டிடக் கலை அமைப்பைப் பெற்றுத் திகழ்கின்றன. மேலும், இக்கோயில்களின் அமைப்பு, கருநாடக மாநிலப் பட்டடக்கல் கோயில்களின் அமைப்பைப் போன்று காணப்படுகிறது. ஆலம்பூரில் உள்ள கோயில்கள் எண்கோண வடிவமான சிகரங்களைக் கொண்டுள்ளன. இவ்வமைப்புச் சிகரங்கள், தென்னகக் கோயில் கலைப்பாணி வகையைச் சார்ந்தனவாகும். இதன் மேல் உச்சியில் ‘அமலகா’ என்று சொல்லப்படும் வரிவரியாக உள்ள உருண்டைகள் காணப்படுகின்றன. இவை வட இந்தியக் கோயில்களில் குறிப்பாக ஒரிசாக் கோயில்களில் காணப்படுகின்றன. தென்னகக் கோயில் கலைப்பாணியும் வட இந்தியக் கோயில் கலைப்பாணியும் இணைந்து, ஆலம்பூர்க் கோயில்களில் காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
ஆலம்பூரில் இருக்கும் ஒன்பது கோவில்கள் சிவன் கோவில்களாக இருப்பினும் இவற்றின் பெயர்கள் பிரமாவின் பெயர்களைக் கொண்டுள்ளன. 1. பால பிரமா, 2. குமர பிரமா, 3. ஆர்க்க பிரமா, 4. வீர பிரமா, 5. விகவ பிரமா. 6. தர்க்க பிரமா 7. கருட பிரமா, 8. சுவர்க்க பிரமா, 9. பத்ம பிரமா என்பன இக்கோயில்களின் பெயர்களாகும். மக்கள் இக்கோவில்களைச் சிறந்தனவாகக் கருதுகின்றனர். கி.பி. 12-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பல் குறுக்கிச் சோமநாதர் (Palkuriki Somanatha) என்பவர் பாண்டித்தார்த்தியா சரித்திரம் (Panditardya Charitra) என்னும் தமது நூலில் ஆலம்பூரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
ஆலம்பூர்க் கோயில்
இக்கோவில்கள் பொதுவாகக் கருவறையையும் அதனைச் சுற்றி நடைபாதையையும் (சுற்றுப்பிராகாரம்) கருவறைக்கு முன்பு இரண்டு தூண்களுடைய முகவறையையும் கொண்டு காட்சியளிக்கின்றன. இத்தூண்களிலும் இவற்றின் மேலுள்ள கூரைகளிலும் கலைதுட்பம் மிக்க சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கோவிலைச் சுற்றியுள்ள மாடக் குழிகள் மகர அமைப்புகளுடன் காணப்படுகின்றன. அம்மாடக் குழிகளில் மாடத் தெய்வங்களாகக் கங்காதரர், திரிபுராந்தகர், தட்சிணாமூர்த்தி, கிராதர், நடராசர் ஆகிய உருவங்கள் காணப்படுகின்றன. இவை தவிர மேலும் பல மாடத் தெய்வங்களும் இடம்பெற்றுள்ளன. கோவிலின் முன்கூடத்தில் அமைந்திருக்கும் இலாட வடிவமான சாளரங்களில் நடராசரின் சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. வீரபிரமன் கோவிலின் முகப்பில் நடராசர் தம் தேவியுடன் இசைவாணர்கள் புடைசூழக் காணப்படுகிறார், 16 கைகளையுடைய சிவன் போர்க் கோலத்துடன் ஆலம்பூர்ச் சுவர்க்க பிரமன் கோவிலில் காட்சி தருகிறார்.
இங்குள்ள கோயில்களில் வீரபத்திரர், ஏழு பெண் தெய்வங்களுடனும் தாய்த் தெவ்வத்துடனும் (Mother Goddess) காட்சி அளிக்கிறார், தாய்த் தெய்வம் தலையில்லாமலும், தலையிருக்க வேண்டிய இடத்தில் தாமரை விளங்கப் பிறந்த மேனியாகவும் விளங்குகிறது. கோயில்களில் காணப்படும் கல்வெட்டுகள், பட்டடக்கல் கோயில்களில் காணப்படும் இரண்டாம் விக்கிரமாதித்தனின் கல்வெட்டுகளைப் போன்னும், அவர் மனைவி திரிலோக்கியமகா தேவியாருடைய கல்வெட்டுகளைப் போன்றும் உள்ளன. இக்கோயில்களைக் கட்ட மேலைச் சாளுக்கிய அரசன் இரண்டாம் விக்கிரமாதித்தன் சிற்பிகளைத் தென்னகத்தில் இருந்து கூட்டிச் சென்றான் என்று கூறுகின்றனர். இக்கோயில்களில் குப்த வாகாடகர் கோயில் பாணிகளும் காணப்படுகின்றன.
ஆலம்பூரில் உள்ள அருங்காட்சியகம் சீரிய சிற்பங்களைக் கொண்டு விளங்குகிறது. இவ்வருங்காட்சியகம் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் தொல்லியல் துறையின் கண்காணிப்பில் இருந்து வருகிறது.
ஆலம் பெர்ட்டு சீன் (கி.பி. 1717-1783) தென்சின் என்ற அம்மையாருக்கும் (Mmede Tencin)தேதோசெக (Chevalier Destouches) என்பருக்கும் முறைகேடான (Illegitimate) குழந்தையாகப் பிறந்தார்; பிறந்த சில நாட்களில் கோயிலில் பெயரிடும்பொழுது புறக்கணிக்கப்பட்டார். இவர் சான் செனிசுட்டு (Joha Jenist) கல்லூரியில் பயின்றார்.