உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/678

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆவணக் காப்பகம்

638

ஆவணக் காப்பகம்

இந்தக் காப்பகத்தை நிருவகிக்க, இந்தியக் கல்வித் துறையின் அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டார். பல்வேறு ஆவணங்களை முறைப்படுத்திப் பட்டியல் செய்தல், தொல்லாவணங்களைச் சீர்ப்படுத்தி அச்சிடுதல், அரசு அனுமதியுடன் ஆவணங்களிலிருந்து சில பகுதிகளைத் தேர்ந்தெடுத்து, குறிப்பிட்ட காலக் கட்டங்களுக்கான ஆவணப் பட்டியல்கள் உருவாக்குதல், அச்சிடுவதற்கான பட்டியல்கள் உருவாக்குதல் முதலிய பணிகள் இந்த அலுவலரின் பொறுப்பாயிற்று.

ஆவணக் காப்பகத்தின் அதிகாரியாக 1911-ஆம் ஆண்டு திரு. தாடுவெல் (Dod well) நியமிக்கப்பட்டார். இவர் ஆனந்தசங்கப் பிள்ளையின் நாட்குறிப்பினை அச்சிடுவதற்கு ஏற்பாடுகள் செய்தார். மாவட்ட விவரத் தொகுப்புச்சுவடிகள் (Gazette) உருவாக்குவதற்காகத் தனி அலுவலர் ஒருவர் 1926-இல் பணி அமர்த்தப்பட்டார். இவ்வாணைக் காப்பகம் 1940-ஆம் ஆண்டில் பிரிட்டிசு ஆவணச் சங்கத்தின் நிறுவன உறுப்பினராயிற்று. இரண்டாம் உலகப் போரின்போது, இந்த அலுவலகத்தின் ஆவணங்கள், சென்னைக்கு வெளியே தொலைவில் ஓரிடத்திற்கு மாற்றப்பட்டிருந்தன. மீண்டும் 1950-இல் ஆவணங்கள் சென்னை அலுவலகத்திற்குத் திருப்பிக் கொண்டு வரப்பெற்றன.

ஆவணக் காப்பகத்திற்கு, கி.பி.1867-ஆம் ஆண்டின் அச்சகம், நூல்கள், பதிவுச் சட்டத்தின் கீழ் வரப்பெற்ற பழைய நூல்கள், 1952-இல் மாற்றப்பட்டன. பல ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட மாவட்ட விவரத் தொகுப்புச் சுவடிகள் திருத்தி அச்சிடப்பட வேண்டுமென்று 1954-இல் அரசுகட்டளை பிறப்பித்தது. ஆவணக் காப்பகத்தின் அலுவலருக்கு இயக்குநர் என்று 1968-ஆம் ஆண்டு பெயர் மாற்றப்பட்டது. காப்பகத்தின் பெயர் ‘தமிழ்நாடு ஆவணக் காப்பகம்’ என்று மாற்றப்பட்டது.

தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் பல சிறந்த ஆவணங்கள் உள்ளன. தங்கத் தகட்டில் எழுதப்பட்ட சாசனம் ஒன்று ‘பிரான்சிசுடே’ என்பவருக்குச் சென்னப்ப நாயக்கரால் 22-7-1639-இல் அளிக்கப்பட்டது. இதுவே சென்னை வரலாற்றின் முதல் ஆங்கில ஆவணமாகும். ‘பிரான்சிசுடே’ என்பவராலேயே இதன் வரைவு உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பது கருதப்படுகிறது. பல ஆவணங்கள், குறிப்பாக 1639-ஆம் ஆண்டு முதல் 1670-ஆம் ஆண்டு வரையிலான ஆவணங்கள், அந்துப் பூச்சியினாலும் காலப் போக்கில் மக்கியும் அழிந்துவிட்டன. தொடக்கக்கால ‘கன்சல்டேசன் தொகுதிகள்’ (Consultation Volumes) 1670-ஆம் ஆண்டிற்குரியதாகும். ஆனால், தொடர்ச்சியான ஆங்கில ஆவணத் தொகுப்புகள் 1672-ஆம் ஆண்டு முதலே உள்ளன. மேலும் 1670-ஆம் ஆண்டிற்கு முற்பட்ட தச்சு, தேனிசு ஆவணங்களும் இக்காப்பகத்தில் உள. சென்னைப் பட்டின அரசரின் சாசனத்தின் மூலம், சென்னைக் கடற்கரையில் (Coromandal Coast) கோட்டையும் அரண்மனையும் கட்டியபிறகு, ‘ஆவணக் காப்பு’ என்ற சொல்லின் பொருள் விளங்கும் வண்ணம் ஆங்கில ஆவணங்கள் முறையாகத் தொகுக்கப்பட்டன.

கிழக்கில் இந்தோனேசியா முதல் மேற்கில் மொரீசியசு வரையில் நடைபெற்ற பிரிட்டிசு அரசின் நடவடிக்கைகளுக்குச் சென்னையே மையமாகும். எனவேதான் புனித சார்சுக்கோட்டை ஆவணங்கள் சிறப்புத்தன்மை வாய்ந்தவையாக உள்ளன. இரண்டாவதாக, கன்னியாகுமரி முதல் நருமதை ஆறு வரையிலான பகுதிகள், சென்னையின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. இவ்வாறாகப் புனித சார்கக்கோட்டை ஆவணங்கள், மிகப் பரந்த நிலப் பரப்பிற்குரிய வரலாற்றுச் செய்திகளை உள்ளடக்கியுள்ளன. புதிய காலத் தென்னிந்தியாவின் வரலாறு மிகப் பரந்த நிலப்பரப்பிற்குரிய வரலாற்றுச் செய்திகளை உள்ளடக்கியுள்ளது. புதிய காலத்தென்னிந்தியாவின் வரலாறு, நாகரிகம் பற்றிய விளக்கங்களை இவ்வாவணக் காப்பகம் கொண்டுள்ளது.

இங்குள்ள ஆவணங்கள், வரலாறு நிருவாகத் தொடர்பான பல உண்மைகள் ஆகியவற்றை அறிய, சிறந்த கருப்பொருளான அடிப்படைச் சான்றுகளைக் கொண்டு திகழ்கின்றன. அவை தச்சு ஆவணங்கள் (Dutch Records) மலையாளக் கடற்கரைப் பகுதியான கொச்சியில் தச்சுக்காரர்களின் குடியேற்றம், கேரளத்தில் அப்போது ஆட்சிபுரிந்த உள்நாட்டு மன்னர்களுடன் தச்சுக்காரர்கள் செய்து கொண்ட ஒப்பந்தம், படேவியா - இலங்கை ஆட்சியாளர்களுடன் கடிதப் போக்குவரத்து முதலிய தகவல்களைத் தெரிவிக்கின்றன. பழைய ‘மோடி’ மொழியில் எழுதப்பட்ட தஞ்சாவூர் அரசு ஆவணங்கள், தஞ்சாவூர் அரண்மனை, கோயில்களைப் பற்றிய நிதிநிலை அறிக்கைகள், தஞ்சை அரசரின் சொத்து, கடன் பற்றிய விவரங்கள், தஞ்சையில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நடந்த நிருவாகத் தொடர்பான கடிதப் போக்குவரத்துகள் முதலிய தகவல்களைக் கொண்டவை. அவை பாரசீக ஆவணங்கள் (Persian Records), கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் கர்நாடக நவாபு ஆட்சிக்காலத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க பல நிகழ்ச்சிகளைக் கூறுகின்றன. இவற்றில் 26.4.1773-ஆம் தேதி முதல் 29.2.1775-ஆம் தேதி வரையில் வாலாசா நவாபு முகமது அலிகான் எழுதிய நாட்குறிப்புகளும் உள்ளன. பாண்டிச்சேரியில் பிரான்சு அதிபர் தூப்ளேயின் திவானாகப் பணியாற்றிப் புகழ்பெற்ற ஆனந்தரங்கப் பிள்ளை தமி-