ஆவணம்
644
ஆவணம்
றையோ குறிப்பிடுமிடத்து, அந்த ஆட்களில் எவரை அல்லது அந்தப் பொருள்களில் எதனைக் குறிக்கிறது என்பதைக் காட்டும் பொருண்மை பற்றிய சாட்சியம் கொடுக்கலாம். பிரிவினர்களின் உட்கருத்தையும் சாட்சியத்தில் உறுதி செய்யலாம்.
ஓர் ஆவணத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள், ஆவணம் எழுதிக் கொடுத்தவரின் உட்கருத்தினை முழுமையாக வெளிக் கொணரவில்லையெனில் அச்சொற்களின் பொருளறிந்து அவ்வா வணத்தைச் சட்டப்படி செல்லத்தக்கு தாக்குவது நீதிமன்றத்தின் கடமை.
வி.ஆர்.கு.
ஆவணம்: எழுத்துகள், எண்கள், குறிகள் ஆகியவற்றைக் காகிதம், ஓலை, செப்புத்தகடு, கல் போன்றவற்றில் செய்தியாகப் பொறித்து வைக்கப் பெறுவது ஆவணம் (Document) எனப்படும்.
இச்செய்திகள் சட்டத்தில் சான்றாகக் காட்டக் கூடியனவாதலின் ஆவணம் இன்றியமையாததாக உள்ளது.
நம்பி ஆரூரராகிய சுந்தரமூர்த்தி நாயனாரின் மூதாதை ஒருவர், தமக்கு அடிமை ஓலை எழுதிக் கொடுத்திருப்பதாக வழக்குக் கூறிச் சிவபெருமான் அந்த ஓலை ஆவணத்தைச் சான்றாகக் காட்டியதாகப் பெரியபுராணம் கூறுகிறது.
ஒன்றைப் பாதுகாக்கும் நோக்குடன் ஒரு செய்தியை அல்லது பல செய்திகளைப் பதித்து வைத்துத் கொள்ளும் வழக்கம் மக்களிடையே நெடுங்காலமாக இருந்து வருகிறது. அந்தப் பதிவுக் குறிப்புகளும் ஆவணங்கள் என்று பொதுவாகத் தமிழில் குறிப்பிடப்படுகின்றன.
முற்காலத்தில் ஒருவருக்கு அரசர் நிலம் அல்லது வேறு மானியம் வழங்கினால், அந்த விவரத்தைச் செப்பேடுகளில் பதித்து முத்திரையிட்டுக் கொடுப்பது வழக்கம், அரசனது ஆணையைக் குறிப்பெடுத்துக் கொள்பவர் ‘திருவாய்க் கேள்வி’ என்றும். அதை ஓலையில் எழுதிக்கொள்பவர் ‘திருமந்திர ஓலை’ வென்றும், பிழையின்றி எழுதப்பட்டுள்ளதா என்று பார்ப்பவர் ‘திருமந்திர ஓலை நாயகம்’ என்றும் குறிப்பிடப்படுகின்றனர். நிலம் தொடர்பான ஆணையாயின், அது ஆவணக் களரி அலுவலர்களால் பார்க்கப்பட்டுப் பின்னர் ‘ஆணத்தி’ என்பவரால் நிறைவேற்றி வைக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் சோழ மன்னர்கள் காலத்தில் செப்பேடுகள், ஓலைச் சுவடிகல் முதலியவற்றைப் பாதுகாத்து வைப்பதற்காக ஆங்காங்கே காப்பகங்கள் அமைக்கப்பட்டன. அக்காப்பகங்களுக்கு ‘ஆவணக் களரிகள்’ என்று பெயர். இவை நிலத் தொடர்பான குறிப்பேடுகளையெல்லாம் தம்மகத்தே கொண்டு விளங்கின. இவற்றில் பல அலுவலர் பணியாற்றினர். தலைமை அலுவலர் ‘திணைக்கள நாயகம்’ என்ற பெயரிலும், மற்ற அலுவலர்கள் ‘வரிப் பொத்தகம்’ என்ற பெயரிலும் பணியாற்றி வந்தனர்.
கௌடில்யரின் அர்த்த சாத்திரம் ‘அட்சபடலா’ என்று ஆவணக் காப்பகத்தைக் குறிப்பிடுகிறது. அக்காப்பகத்தில் தலைமைப் பொறுப்பாளர் ‘மகா அட்சபாலிகா’ என்று குறிப்பிடப்படுகிறார்.
உலகின் வெவ்வேறு நாடுகளிலும் ஆவணக் களரிகள் இருந்திருக்கின்றன. இக்காலத்தில் அனைத்து நாட்டு அரசுகளும் அரசாங்க ஆவணங்களைப் பாதுகாத்து வருவதற்காக ஆவணக் களரிகள் நிறுவியுள்ளன
இற்றைக்கு 4000 ஆண்டுகட்கு முன்னதாகச் சிரியா நாகரிகத்தைச் சார்ந்த ஆவணக் காப்பகம் ஒன்று தொல்லியல் வல்லுநர்களால் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது, பூமிக்குள், பழைய நகரம் இருந்த பகுதியில் எழுத்துகள் பொறித்த செங்கல் பாளங்கள் ஒரு குவியலாக இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்திருக்கிறார்கள். அவை அக்காலச் சமுதாயப் பழக்க வழக்கங்களையும் வணிக முறையையும் நாட்டு நடப்புகளையும் குறிப்பனவாக இருக்கலாம் என்று நம்புகின்றனர்.
எகிப்தின் இரோகிளிப்சு எழுத்தில் உள்ள முத்திரைகள், சுமேரியர்களின் முத்திரைகள் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மொகஞ்சதாரோ அரப்பா நாகரிகத்தில் எழுத்துப் பொறிக்கப்பட்டுள்ள முத்திரைகள், களிமண் தகடுகள் ஆகியன, அக்கால மக்கள் தங்கள் நடவடிக்கைகளை எழுத்தில் பொறித்துப் பாதுகாத்து வைத்திருந்ததன் அடையாளங்களாகும். பழைய ஆவணங்கள் முந்தைய வரலாற்றை அறிவதற்கும் எழுதுவதற்கும் பெரிதும் துணைசெய்துள்ளன.
சொத்துக்களுக்கான உரிமைகளையும் உடைமைகளையும் நிலைநாட்ட ஆவணத்தைச் சான்றாகக் காட்ட வேண்டுமெனச் சட்டம் வற்புறுத்துகிறது. அதனால், இந்தியச் சான்றியல் சட்டத்தின் மூன்றாம் பிரிவில் ஆவணம் என்பதன் இலக்கணம் கூறப்பட்டுள்ளது. எழுதி வைக்கப்பட்ட செய்தியும் அச்சடித்துள்ள செய்தியும் வரைபடம் மூலம் குறிக்கும் செய்தியும் ஆவணங்களே என்று அச்சட்டம் எடுத்துக்காட்டுகிறது.
இந்தியத் தண்டனைத் தொகுப்புச் சட்டத்தின் 29-ஆம் பிரிவில் ‘ஆவணம்’ என்னும் சொல் விளக்கப்படுகிறது. ‘அது எண்ணாலோ எழுத்தாலோ, குறி-