ஆவியுலகக் கோட்பாடு
650
ஆவியுலகக் கோட்பாடு
களுக்கு அப்பாற்பட்ட இல்வகை நிகழ்ச்சிகளை அன்றாட வாழ்வில் கொண்டிருந்த ஆதிக்குடியினரின் மனத்தில் படிப்படியாக ஒரு சிந்தனை எழுச்சிதோன்றியது. மனிதன் இறக்கும்பொழுது அவனிடமிருந்து கண்ணுக்குப் புலனாகாத ‘ஆற்றல்’ வெளிப்பட்டிருக்கவேண்டும் என்றும், அதனாலேயே அவன் மரணமடைகிறான் என்றும், அந்த ஆற்றல் உடலினுள் இருக்கும்பொழுது உயிருள்ளவனாகவும் உடலிலிருந்து வெளிப்பட்ட பொழுது இறந்தவனவாகவும் ஆகிறான் என்றும் ஆதிக்குடியினர் கருதினர்.
ஆவியின் உருவம், வடிவம் ஆகியவற்றைத் தொட்டுணர முடியாது. இவர்கள், ஆவி என்னும் சொல் ‘நிழல்’ அல்லது ‘மறைவு’ என்பதனைக் குறிக்கும் என்றும், உணரமுடியாத இவ்வாவியின் உணர்வுகளை அது தங்கும் உடல் என்ற கலத்தில் மட்டுமே புரிந்துகொள்ள முடியும் என்றும் கருதினார்கள், ஆதிக்குடியினர் கனவின் எதிரொலியையும் ஆவியின் பல்வேறு செயல்களையும் உணர்ந்து, மனிதனுக்கு ‘நிலையற்ற தசைப்பகுதி’ ‘ஆன்மிகமான ஆவி’ ஆகிய இரு பகுதிகள் உள்ளன என முடிவு செய்தனர்.
ஆதிக்குடியினரின் ஆவி-உடல் நம்பிக்கையின் அடுத்த கட்டத்தில், ‘உலவும் ஆவி’ (Free Soul) ‘உடல் ஆவி’ (Body Soul) என இரண்டு ஆவிகள் உடலில் உள்ளன என்று நம்பினர். ‘உலவும் ஆவி’ உடலுக்கு வெளியே சென்று பல செயல்களை உணர்கிறது என்றும், ‘உடல் ஆவி’ வெளிப்படும் பொழுது இறப்பு நிகழ்கிறது என்றும் அவர்கள் கருதினர். மேலுமவர்கள் உலவும் ஆவி ஒருவரின் மூச்சிற்கும், நிழலிற்கும் காரணமாக அமைகிறது என்றும், உடல் இரத்தம் தலை ஆகியவற்றின் உருவமாக இருக்கிறது என்றும் எண்ணினார்கள்.
உடலிலிருந்து ஆவி வெளிப்பட்டமை-இறந்தமை, நிலைத்ததா நிலையற்றதா என்னும் எண்ணத்தில் விளைந்தவையே ‘பச்சைச் சடங்கு’, ‘உலர்ந்த சடங்கு’ எனப்படும் இருவித ஈமச் சடங்குகளாகும். மனிதன் இறந்தவுடன் பச்சைச் சடங்கையும், பின்னர் அவன் ஆவி இனித் திரும்பி வராது என முடிவு செய்யப்பட்ட சிலநாள்களுக்குப் பின்னர் உலர்ந்த சடங்கையும் மேற்கொள்கிறார்கள். உலர்ந்த சடங்கு ஒருவன் ஆவியை முழுவதுமாகக் கட்டுப்படுத்துகிறது என்று நம்புவதால் அச்சடங்கு மிகவும் இன்றியமையாததாகக் கருதப்படுகிறது.
நீலகிரி மலையில் வாழும் தோடர்கள் இந்த இருவித ஈமச் சடங்குகளையும் வழக்கில் கொண்டுள்ளனர். பச்சை சாவுச் (Pachai Chavu - Wet or Green Funeral) சடங்கை இறந்தவுடனேயும், வரைதன் (Varaidan-Dry Funeral) எனும் உலர்ந்த சடங்கைச் சில நாள்களுக்குப் பிறகும் செய்கின்றனர். இந்த உலர்ந்த சடங்கு இந்துக்கள் ‘கருமாதி’ என்னும் பெயரில் செய்யும் சடங்கினை ஒக்கும்.
நடு இந்திய ஆதிக்குடிகளான ஒரவன், சந்தால்களிடையேயுள்ள ஆவியுலக நம்பிக்கையை மசினியேத்தான் (Majniyethan) வழிபாட்டில் காணலாம். பயிர், மழை, கால்நடை ஆகியவற்றின் நலனுக்கெனக் குறவர்கள் தனித்தனி ஆவிகளை வழிபடுகின்றனர். சட்டிசுகர் பகுதியில் வாழும் காமர், புன்சியாக என்னும் குடியினர், உலவும் ஆவியான மட்சி (Madhee) சுடுகாட்டிலும், உடல் ஆவியானசிவ்வு (Jiv) இறைவனிடத்திலும் சேர்கின்றன என்று நம்புகின்றனர். மிகிர் குடிகள், இறந்தவரின் ஆவி குடும்ப நலனுடன் தொடர்புடையது என எண்ணுவதால் குழந்தைகளுக்கு இறந்தவரின் பெயரையே சூட்டுகின்றனர். மேற்கு இந்தியாவில் பில்கள் (Bhils), விர் (Vir) என்ற மூதாதையர் ஆனியை வழிபடுகின்றனர்.
கோத்தர் ஆதிக்குடிகல் பசுதெள (Pasdau) என்னும் பச்சைச் சடங்கையும், வால்தெள (Varldau) என்னும் உலர்ந்த சடங்கையும் வழக்கில் கொண்டுள்ளனர். ஆவியைக் கொண்டு நெடுநாள்களுக்கு முன்னர் இறந்த மூதாதையர்களைக் கனவில் உணரமுடிவதால் ஆவியை அழியாத மரணமற்ற, தெய்விகமான பொருளாக ஆதிக்குடியினர் அனைவரும் கருதுகின்றனர்.
ஆலி நம்பிக்கையுடைய கூறுகள் சில, உலகின் பெரிய சமயங்களுள் காணப்படினும், அச்சமயங்கள் ஆவியுலகக் கோட்பாடு உடையவை எனப்படா. ஆனால், பெரும்பாலான ஆதிக்குடிகளின் சிறு சமயங்களில் ஆவியுலக நம்பிக்கையே முதன்மையாகக் காணப்படுவதால், தொன்மைச் சமயம் குறித்த இனப்பரப்பளவியலாய்வு இன்றியமையாததாகிறது.
தைலர், ஆவியுலகக் கோட்பாட்டின் வழி ஆதிக் குடிகளைத் தத்துவ ஞானிகளாகவும் பகுத்தறிவாளர்களாகவும் மிகைப்படுத்தியுள்ளார் என்றும், இவருக்குக் கள ஆய்வு அனுபவம் இல்லாமையால் ஆதிக்குடிகளின் சுறுசுறுப்பான வாழ்க்கையில் தங்களைப் பற்றிச் சிந்தனை செய்யவே அவர்களுக்குக் காலம் இல்லை என்பதை உய்த்துணரத் தவறிவிட்டார் என்றும் மானிடவியலாருள் சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர். இவரது ஆய்வு, இயற்கை அறிவியலார் பார்வையிலேயே அமைந்திருப்பதால், ஒரு பகுதித் தொன்மைச் சமயத்தைமட்டும் மிகைப்படுத்தியுள்ளார் என்று மாக்சு முல்லர் (Max Muller), தர்கைம் (Durkheim), மாரட் (Marett) முதலிய அறிஞர் கருதுகின்றனர். ஆயினும், தொல்குடியிலிருந்து நாகரிகமடைந்த மனிதன் வரை அவன் கொண்டுள்ள சில தத்துவத்திற்கு ஆவியுலகக் கோட்பாடு வித்திட்டது என்றால் அது மிகையாகாது.
சீ.ப.