பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I

2

வாழ்வியல் நெறிகள்

திருவள்ளுவர்,

பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை

-திருக்குறவி கொல்லாமை : 2 என்றார்.

‘கிடைத்ததைப் பலருக்குப் பகிர்ந்து உண்னக் கொடுத்து வாழ வேண்டும்; சோம்பல் கூடாது; எவரையும் வெறுக்கக்கூடாது; சான்றோர் அஞ்சும் அறஞ்சாராச் செயல்களைச் செய்யக் கூடாது. நாளும் கல்ல செயல்களையே காடிச் செய்ய வேண்டும். எவ்வளவுதான் இலாபம் கிடைப்பதாயினும் பழிச் செயல்களைச் செய்யக்கூடாது. அத்தகைய மனவுறுதி வந்தமைதல் வேண்டும். தன்னலம் பாராமல் பிறர் கலம் பேணும் பெற்றியராகத் துலங்க வேண்டும்’ என்று கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்னும் அரசப்புலவர் பாடியுள்ளார்.

உண்டால் அம்ம இவ்வுலகம்; இந்திரர் . அமிழ்தம் இயைவது ஆயினும் இனிதெனத் தமியர் உண்டலும் இலரே முனிவிலர், துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவது அஞ்சிப் புகழ்னனின் உயிரும் கொடுக்குவர் பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர், அன்ன மாட்சி அனையர் ஆகித் தமக்குஎன முயலா நோன் தாள் பிறர்க்குஎன முயலுகர் உண்மை யானே

-புறநானூறு 182 அடுத்து, ‘இரையைத் தேடுவதோடு இறையைாத் தேடு’ என ஆன்றோர் அருளியுள்ளனர். தமிழ்ப் பண் பாட்டின் தலையூற்றாக இதனை நாம் கொள்ளலாம்.