பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

\

\ டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 105

பாவர்க்குமாம் பிறர்க்கின்னுரை தானே

X. என்கிறார். \

இப்பொழுது திருமூலர் ெத ளி வு று த் து ம் வாழ்க்கைக் கோட்பாட்டினை ஒருசேரக் காண்போம். காம் வணங்கும் இறைவனின் இணையடிகளில் பத்திர மிட்டு வணங்குதலும், காம் காணும் வாயற்று உயிர் இனமாம் பசுவிற்கு உண்பதற்கென ஒரு புல்லும், காம் உண்ணும் பொழுது அவவாறு உண்ணாத நிலையில் உயிர்க்கும் சகோதர அன்பர்களுக்கென ஒரு வாய்ச் சோறும், பிறர் மனம் மகிழ்வதற்கென இன் சொற்களும் வேண்டற்பாலன என்பதனையே பின்வரும் பாடலில் திருமூலர் பெருமான் தெளிவுறுத்துகின்றார்.

யாவர்க்கு மாம் இறை வற்கொரு பச்சிலை யாவர்க்கு மாம் பசு வுக் கொரு வாயுறை யாவர்க்கு மாம் உண்ணும் போதொரு கைப்பிடி a யாவர்க்கு மாம்பிறாக் கின் னுரை தானே.

-திருமந்திரம்: 252

இவ்வாறாகத் தவஞான யோகியாம் திருமூலர் பெருமான் இவ்வுலக வாழ்வின் நிலையாமையினைப் பசுமரத்தான யென மனத்திற் பதியும் வண்ணம் தெள்ளத் தெளிய உணர்த்திப் பின் வையத்துள் வாழ்வாங்கு வாழும் கெறியினை வகையுறப் புலப் படுத்துகின்றார். திருமூலர் தெளிவுறுத்தும் வாழ்க்கை கெறி, செம்மையும் சிறப்பும், துய்மையும் துகளறு கிலையும் கொண்ட வாழ்க்கை கெறியாக இன்றைக்கும் துலங்குவதனைக் காணலாம், -