பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 107

வியாபித்திருக்கும் காரணம் பற்றி விஷ்ணு என்பர்.

விஷ்ணுவைப் பற்றிய சமயம் வைணவம்.”

வைணவ சமயம் தமிழகத்தில் கடவுள் வழிபாடு தோன்றிய காலங் தொடங்கி உள்ளது.

சான்று

1. மாயோன் மேய காடுறை உலகமும்

-தொல்காப்பியம்

2. கடுங்தேர் இராமன் உடன்புணர் சீதையை

வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை கிலமசேர் மதர் அணி கண்ட குரங்கின் செம்முகப் பெருங்கிளை.

-புறநானுாறு 3. வென்வேல் கவுரியர் தொன்முது கோடி

முழங்கு இரும் பெளவம் இரங்கும் முன்துறை வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த பல்வீழ் ஆலம்.

-அகநானுாறு: *- மடி இலா மன்னவன் எய்தும் அடிஅளந்தான்

தாஅயது எல்லாம் ஒருங்கு

தாம் வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு. o +,

-திருக்குறள்

இவ்வாறே சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்களிலும் வைணவ சமயக் கடவுள் போற்றப்

படுகின்றார்.

1. ஜி. எதிராஜுலு நாயுடு, பக்திப் பூங்கா, பக்தன்’

காரியாலயம், சென்னை -5, 1950, பக் 1