பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 வாழ்வியல் நெறிகன்

அடுத்து மண்மகளாகிய பூதேவியை-இளைய பிராட்டியைக் குறிக்கின்றார்.

பின்னர் ஆயர் மடமகள் குறிக்கப் பெறுகின்றார். முதலிருவரும் (திரும கள்-பெரிய பிராட்டி, மண்மகள் இளைய பிராட்டி) திருமாலின் இரு மனைவியராகப் போற்றுவது வைணவ மரபாகும்.

ஈண்டு ஆயர் மடமகள் என்பது ஆயர் குலக் கொழுந்தாகிய கப்பின்னையைக் குறிக்கின்ற தென்பர்.

கண்ணனாக இறைவன் இவ்வுலகில் தோன்றிய காலத்தில், ஆயர்குலக் கொழுந்தாகிய கப்பின்னைப் பிராட்டியைக் காதலித்து மனம் செய்துகொண்டார். இதனால் திருமாலிற்கு முத்தேவியரை மணவாட்டி யராகக் கூறுவது தமிழ் ம ர பகா க வளர்ந்து வந்துள்ளதைக் காணுகின்றோம்.”

தம்முடைய தன்மை சேடங்களாலே, பகவா னுடைய காதலுக்குரியவர்களான பட்டத்துத் தேவி மார்கள் மூவரோடும் இவர்க்கு உண்டான ஒப்புமை... வீறுடையவளாய்ப் பெரிய பிராட்டியாரைப் போன்று முடிக்கு உரியவளான பூரீ பூமிப் பிராட்டியாரோடு ஒத்த சிறப்பினை உடையவள் என்று சொல்லும்படி... கப்பின்னைப் பிராட்டிக்கே உரியதான கிருஷ்ணா வதாரத்திலும்’ என்னும் மணவாள மாமுனிகளின் உரைவிளக்கப் பகுதியும் தெளிவுறுத்துகின்றன.”

1. டாக்டர் க.த. திருநாவுக்கரசு, வாழ்வும் இலக்கியமும்,

1979. பக், 51

2. ஆசாரிய ஹிருதயம், வியாக்கியானம் (தமிழா.பக்.305)