பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 வாழ்வியல் நெறிகள்

கிங்தை பிறரைப் பேசாமல்

கினைவிலும் கெடுதல் செய்யாமல்

வந்திப்போம் அதனை வணங்கிடுவோம்

வாழ்வோம் சுகமாய் வாழ்ந்திடுவோம்.

இவ்வாறு இறை கம்பிக்கையுடன் வாழத் தலைப் படும் கேரத்தில், அடுத்து மேற்கொள்ள வேண்டிய வாழ்வியல் கெறி எதுவெனச் சிக்திக்கும் பொழுது ஈட்டும் செல்வத்தினைப் பிறர்க்குப் பகிர்ந்து வாழும் பெற்றியினை மேற்கொள்ள வேண்டும் என்பது புலனாகின்றது.

ஏனெனில் ‘கடல் சூழ்ந்த இவ்வுலகை ஒரு வெண் கொற்றக் குடையின்கீழ் ஆளும் பேரரசனாயினும் சரி, இரவும் பகலும் கண்ணுறங்காமல் விலங்குகளை வேட்டையாடித் திரியும் கல்வி அறிவற்ற ஒருவனா யினும் சரி இருவரும் உண்பது காழி அரிசிச் சோறு தான்; உடுப்பவை இடுப்பில் ஒன்று, தோளில் ஒன்று ஆக இரண்டுதான். ஆக இரண்டேதான். மற்ற பிற வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களும் இவ்வாறே தான். எனவே செல்வத்தை ஈட்டுவதன் பயன், இல்லாதவர்க்கு ஈவதேயாகும். அப்படியில்லாமல் காம் மட்டும் அனுபவித்து வாழ்வோம் என்று இருந்தால் அதனால் வரும் கேடுகள் பல உண்டு’ என்று கக்கீரனார் கயம்பட கவின்றுள்ளார்.

தென்கடல் வளாகம் பொதுமை யின்று வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும் கடுங்ாள் யாமத்தும் பகலும் துஞ்சான் கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்