பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 - வாழ்வியல் நெறிகள்

மகாபுராணங்களிலும் வேறு நூல்களிலும் கூறப் பட்டிருக்கும் தக்கயாக சங்காரக் கதையினின்றும் இதிலுள்ள கதைப்போக்கு வேறுபட்டிருத்தலின் இந்த முறைக்கு ஆதாரமாக உள்ள முதல் நூல் இன்ன தென்று இப்பொழுது விளங்கவில்லை.

ஆளுடைய பிள்ளையார் சமணரை வாதில் வென்ற வரலாற்றிற் காணப்படுபவனவாய் இதன்பாலுள்ள சில செய்திகள் பெரியபுராணத்திற் காணப்பட வில்லை.

மற்றப் பரணிகளுக்கும் இதற்கும் உள்ள வேறுபாடுகள்

டாக்டர் உ. வே. சாமிகதையர் அவர்கள் கூறி யுள்ள வேறுபாடுகள் பின்வருமாறு :

1. மற்றப் பரணிகளைப் போலப் பாட்டுடைத் தலைவனுக்கு கன்மை உண்டாக வேண்டுமென்று வாழ்த்தாமல் ஆக்குவித்தோனுக்கு கன்மை உண்டா கும்படி தெய்வங்களை வாழ்த்தியிருத்தல்.

2. உமாபாகர், வி. காயகர், முருகக்கடவுள், திருஞானசம்பந்த ரென்னும் இவர்களை மட்டும் வாழ்த்தியிருத்தல்.

3. நூலுறுப்புக்களின் பிறழ்ச்சி.

4. காடு பாடியது முதலியவற்றில் யாமன அசலின் முறைப்படி வருவித்தல்.