பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

/

126 - வாழ்வியல் நெறிகள் |

கனுக்குக் கல்வி புகட்டிய ஆசிரியராகவும்,அவனுக்கும் அவன் குமாரன் இரண்டாம் இராசர ாசனுக்கும் அவைக்களப் புலவராகவும் இருந்தவர். பல நூல்களை இயற்றியும், இயற்றுவித்தும் தமிழ்ப்பணி புரிந்தவர். இம்மூவர்மீது ‘மூவருலாவும் குலோத்துங்கன்மீது ஒரு பிள்ளைத் தமிழும் இயற்றினார். இவரிபுத்துப் பேரன்புற்ற அம்மூவருளொருவன் இவருக்கு / அரிசி லாற்றங்கரையில் ஒருரை அளித்தான். அங்கு இவர் கலைமகள் கோயில் ஒன்றைக் கட்டினார். ஆற்றங் கரைச் சொற்கிழத்தி வாழியே (தக்க 813) என்னும் அடியால் இது விளங்கும். இவ்வூர் தஞ்சை மாவட்டப் பூந்தோட்டம் புகைவண்டி நிலையத்தினருகே இன்று: அமைந்துள்ளது.

இவர் இராசராசனுலாவைப் பாடி அரங்கேற்றிய பொழுது இவருக்கு அவ்வரசன் ஒவ்வொரு கண்ணிக் கும் ஆயிரம் பொன் விழுக்காடு வழங்கினான். இவரை ஆதரித்தவர்கள் மூவதேயன்றித் திருச்சிற்றம் பலமுடையான் பெருமாள் கம்பி, புது வைக்கiங்கேயன் திரிபுவனச் சோமனென்னும் செல்வர்களுமென்று இக் நூலாலும் இதனுரையாலும் பிறவற்றாலும் விளங்கு கின்றது.

இவர் காலத்திருந்த புலவோர் கம்பிகாளியார், கெற்குன்றவான முதலியார் முதலியோர் ஆவர். கம்பரும் புகழேந்தியும் இவர் காலத்தில் இருந்தாரென் பது சிலர் கொள்கை; அதற்குத் தக்க ஆதாரங்கள் கிடைக்கவில்லை.

இவர் பாடற் பெரும்பரணி தேடற் கருங்கவி கவிச்சக்கரவர்த்தி பரவச் செஞ்சேவகஞ் செய்த சோழன்றிருப்டெயா’ (குலோத். பிள்ளை) என்பதில்