பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H.32 வாழ்வியல் நெறிகள்

கினைப்பது எதுவோ அது சிவம் எனப்படும். அச்சிவு சம்பந்த முடையதே சைவ நெறியாகும்.

சிவம் என்ற சொல், சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான-தலைவனான சிவபெருமானையே இன்று. சிறப்பாகக் குறிப்பிடுகின்றது. ஆனால் இச்சொல் செம்மை அளிப்பது, மங்கலம் தருவது என்ற பொருளில் வேதத்தில் காணப்படுகிறது என்பர். இக்கருத்து ஒருவகையில் சமயங்கடந்த ஒர் ஆனந்த கிலையைச் சுட்டியது போலும். மேன்மையானது எதையும் சிவம் என்று சொல்லி வந்தார்கள். I

பதினைந்தாம் நூற்றாண்டு வரையில், விட்டுலகு என்று குறிப்பிடும்போது சைன நூல்கள் ‘சிவகதி” என்றே குறிப்பிடுவதை இங்கு எண்ண வேண்டும். “திதறு சிவகதி’, ‘இருளறு சிவகதி’, ‘சிவகதித்து வேந்து’ என்பன போன்ற தொடர்கள் பரவலாக வழங்குவது, சிவம் எனும் சொல் முக்தி, பேரின்பகிலை முதலியவற்றைச் சுட்டியதை அறிய முடிகின்றது. இன்றும் காலமானார் என்பதைச் சிவகதி அடைந்தார்” என்று சுட்டும் வழக்கம் இதனை உறுதி செய்யும்.

‘அன்பே சிவம்’ என்னும் திருமூலர் வாக்கால் *சிவம்’ என்பது அன்பு வடிவாயது என்ற கருத்தையும் அறியமுடிகின்றது. - -

இவைகளால் சிவசம்பந்தமுடைய சைவம்-அன்பு, செம்மை, முக்தி முதலிய விரிந்த பொருளுடைய சொல் என்பது விளங்கும். | r-l

  • - . . . .