பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iš4 - * * = வாழ்வியல் நெறிகள்

அமெரிக்காவில்

வட அமெரிக்காவில் ‘கொலறடா’ என்னும் ஆற்றின் பக்கத்திலுள்ள குன்றின்மீது சிவன்கோவில்’ என்ற ஒர் இடம் இருக்கிறது. அவ்விடம் பதினாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.

அமெரிக்காவின் பல பகுதிகளிலும் இலிங்க வணக்கம் பண்டைக்காலம் முதலே இருந்து வந்தது. அங்கு கோயிலில் லிங்கங்களை வைத்து வழிபட்டு வந்தனர். லிங்கம் தனியாகவும், லிங்கமும் ஆவுடை யாரும் சேர்ந்தும் பலவாறு வழிபடப்பட்டன என்று அமெரிக்க வரலாறு அறிவிக்கின்றது. அமெரிக்கா உட்பட, உலகம் முழுவதிலும் பசிபிக் தீவுகளிலும் இலிங்க வழிபாடு இருந்தது எனின், சைவ சமயத்தின்

பழமையை என்னென்பது!

அயல்நாடுகளில் சைவம்

நடுத்தரைக் கடலிலுள்ள ‘கிரீட்” என்னும் தீவில் இருந்த பண்டை ககரங்களுள் ஒன்று சிவன் எனப் பெயர் பெற்றிருந்தது. அங்கு, கிலத்திற்கடியிலிருந்து எண்ணற்ற சிறிய சிவலிங்கங்கள் ஆராய்ச்சியாளர் களால் கண்டெடுக்கப்பட்டன.

சிறிய ஆசியாவில் (Asia Minor) கிடைத்த புதை பொருள்களால் இடபத்தின் மீது வீற்றிருக்கும் தெய்வ வழிபாடும், இடப வழிபாடும் அங்கு இருந்தன என்பதை அறிய முடிகிறது.