பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 வாழ்வியல் நெறிகள்

எங்கும் வியாபித்திருப்பது; அணுவுக்கு அணுவாயும், மகத்துக்கு மகத்தாயுமுள்ளது. அவ் இறைவனை ‘இன்ன தன்மையன் என்றறியொண்னா எம்மான்’ என்று சுந்தரர் தேவாரம் உணர்த்துகின்றது.

இறைவன் முன்னைப் பழமைக்குப் பழமையாக வும், பின்னைப் புதுமைக்குப் புதுமையாகவும் விளங்கும் சிறப்பினையுடையவன் என்பார் மணி வாசகப் பெருந்தகை.

முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும் போர்த்துமப் பெற்றியனே

என்பது அவர் வாசகம்.

கொடிகிலை கந்தழி வள்ளி என்ற வடுய்ேகு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே

என்ற நூற்பாவில் தொல்காப்பியனார் செம்பொருளாம் இறைவனை உணர்த்த ‘கந்தழி’ என்ற சொல்லை ஆண்டிருக்கிறார். கந்தழி என்ற சொல், கந்து-கட்டு; அழி-அற்றவிடம் என்ற பொருள் தரும். செம் பொருளாகிய இறைவன் கட்டற்றவன் என்ற உண்மை இச்சொல்லால் உணர்த்தப்படும். கட்டுடையன உயிர்கள்; கட்டில்லாதவன் இறைவன் என்று அறிந்த கிலையில் தமிழ் மக்கள் இறைவனைக் கந்தழி என்று அழைத்தனர். கட்டாகிய பாசத்தையுடைய உயிர் களாகிய பசுக்கள், பதியாக கடவுளை அடைய வேண்டுமானால், பாசமாகிய கட்டுக்களை விட வேண்டும் என்பது சைவ சித்தாந்தம்,