பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 145

சிவனடியார்களைப் பேணி, அவர்களுக்கு வேண்டு வன கல்கி, அமுது செய்வித்து, அதனால் முக்தி பெற்ற தொண்டர்கள் பதின் மருக்குக் குறையாமல் இருக்கிறார்கள். இதனால் விருந்தோம்பல் சைவ சமயத்தின் தலையாய பண்பாகும் என்பதை அறியலாம்.

அருள் நூல்கள் ஓதுதல்

அருள் என்ற சொல்லுக்குக் கொடை,சக்தி முதலிய பல பொருள்கள் உண்டு. அருள் என்பது அன்பின் முதிர்ச்சியால் உ ண் டா வ து. அதனால்தான் அருளென்னும் அன்பின் குழவி’ என்றார் வள்ளுவப் பெருந்தகை. அன்பு என்பது தொடர்புடையாரிடத்தும், அருள் என்பது தொடர்பில்லாதார்மாட்டும் தோன்றும் ஒருவகை உள்ள நெகிழ்ச்சியாகும். இத்தகைய அருள் உள்ளம் படைத்த பெரியோர்களால் எழுதப்பட்ட நூல்கள் அருள் நூல்கள்’ எனப்படும்.

உயிர் என்பது என்ன? அஃது எப்படியிருக்கும்: அஃது எங்கிருந்து வருகிறது? அது தன் வினைமுடிந்த பின் எங்கே செல்லுகிறது? என்பன போன்ற செய்தி கள் மனிதனால் உணர இயலாதவையாக இருக் கின்றன. இச்செய்திகள் யாருக்கும், எக்காலத்தும் தெரியலாகாது என்று எச்சக்தி மறைத்து வைத்திருக் கிறதோ, அந்தச் சக்தியையே காம் அருள என்றும் கடவுள் என்றும் கூறுகிறோம். அச்சக்திக்கு மிக அண்மையில் கம்மைக் கொண்டு சேர்த்து, அதன் அருளுக்குப் பாத்திரமாவதற்கு வழிகாட்டுவதுதான் அருள் நூல்களின் பயன். அவை மனம் என்னும் குரங்கைத் தன் விருப்பம் போல் செலவிடாது, ஒரு நிலைப்படுத்துவது எல்லோர்க்கும் இயலாது. அத்தகை யோர், அருள் நூல்களைப் பயின்று வந்தால் சிங்தைக்