பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 வாழ்வியல் நெறிகள்

கும் மனத்துக்கும் நல்ல பயிற்சி ஏற்படும். ஒருமைப் பாடுள்ள மனத்தின் துணையால் அரிய காரியங்களை யும் சாதிக்க இயலும்.

மனிதன் அறிவு அழிவுக்கு வழிகோலாமல், ஆக்கத்திற்குப் பயன்பட வழிவகுப்பன அருள் நூல்களாகும்.

சமயப் பொறை

இன்று சமயத்தின் பெயரால் உலகில் பல கலவரங் கள் கிகழக் காண்கிறோம். இவை உண்மை நிலையை அறியா மாபெருங் குறையால் நிகழ்வனவாகும். சைவ சமயம் தொடக்கத்திலிருந்தே சமயப் பொறையைஎல்லாச் சமயங்களையும் மதிக்கும் பான்மையை வலியுறுத்தியுள்ளது.

சைவம் பிறரைப் பழிக்காதது, பிறரைக் குறை கூறாதது. ஊர் ஒன்றுதான்; அதற்கு வழிகள் ஆறு உள; அதுபோல் அறுவகைச் சமயங்களும் இறை வனை அடைவதற்கு வெவ்வேறு வழிகளாவன. பசுக்கள் பல வண்ணமாயிருப்பினும், அவற்றின் பால் ஒரே வண்ணமாய் இருப்பது போல, சமயங்கள் . பலவாயினும் அவை கூறும் முடிவானபொருள் ஒன்றே என்பன சைவ சாத்திரம் கூறும் கருத்துகளிற் சில. விரிவிலா அறிவுடையார்கள் புதிதாக ஒரு சமயத்தைப் பகையுணர்ச்சியால் தோற்றுவித்தாலும் சிடைட, அதுவும் என் பிரானுக்கு ஏற்றதாகும் என்பார் அப்பர். அறுவகைச் சமயத்தோர்க்கும் அவரவர் பொருளா யிருப்பதோடு, இறைவன் அவற்றைக் கடந்து அப்பாலான தன்மையுடையவனாயுமிருக்கிறான் என்ற எண்ணம் ைச வ த் தி ல் மேலோங்கியிருக்கிறது. இதனால் சமயப்பொறை ஏற்படுகின்றது. சைவம்