பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. தமிழில் பக்திப் பனுவல்கள்

(குமரகுருபரர், சிவப்பிரகாசர், தாயுமானவர், இராமலிங்கர், இக்காலத் தமிழ்க் கவிஞர்கள்)

முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய்ப் பேர்த்தும் அப்பெற்றி யனாய் இறைவன் விளங்குவது போலவே, தமிழ் மொழியும் பழமைக்குப் பழமையாய், புதுமைக்குப் புதுமையாய்ச் சிறந்தொளிர்கின்றது. தமிழ் இலக்கியப் பேரியாறு காலங் காலமாய்க் கோலம் பல புதுக்கிக் கொள்ளை வனப்புடன் ஒடிக் கொண்டிருக்கின்றது. மொழியின் வாயிலாக வாழ்க்கையை வடித்து நிற்பது இலக்கியமாகின்றது. ஒரு காலத்தெழுந்த இலக்கியம், அக்காலச் சூழலை, மக்கள் வாழ்க்கைப் பின்னணி யினை விளங்க எடுத்துரைக்கின்றது. எனவே ஒர் இலக்கியம், அஃது எழுந்த காலத்தின் விளைவு GTGorgostub. (A Literature is the product of the age) od, காலத்தெழுந்த இ ல க் கி ய த் தி ல் அக்காலத்தின் பின்னணி தவறாது இடம் பெற்றிருக்கக் காணலாம்.

காதலும் போரும் பழந்தமிழ் இலக்கியங்களின் பிழிவாக அமைந்துள்ளன; இடைக்கால இலக்கியங் களின் பிழிவாகச் சமயமும் தத்துவமும் அமைகின்றன; அறிவியலும், மனிதவியலையொட்டிய கருத்துகளும்