பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 149

இக்கால இலக்கியங்களின் கொள்கைகளாக விளங்கக்

&sroor sum ib. (Love and war forehed the themes of the ancient classics; Religion and philosophy of the modieval poems as Science and humanity predominate the modern writings'"—Prof. M. s. Purnalingam Pillai • Tamil Miterature”).

இடைக்கால இலக்கியங்கள் பக்தி இயக்கத்தின் விளைவால் முகிழ்த்தவைகளாகும். “காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கப் பாடிய அடியவர்தம் மனவெழுச்சி களின் உந்துதலிற் பிறந்தவைகளாகும். தவத்திரு தனிகாயக அடிகளார் தமிழ்மொழி பற்றிப் பின் வருமாறு குறிப்பிட்டிருக்கக் காணலாம் :

‘அளவிலும் சுவையிலும் தமிழிலுள்ள திருப்பாடல்கள் போல், பிற இலக்கியங்களில் இல்லை. எனவே, மொழிநூல் முறையில் எத் துணை வழுவுடையதாயிருப்பினும், ஆங்கிலம் வணிகத்தின் மொழி என்றும், இலத்தீன் சட்டத் தின் மொழி என்றும், கிரேக்கம் இசையின் மொழி என்றும், ஜெர்மன் தத்துவத்தின் மொழி என்றும், பிரெஞ்சு துாதின் மொழி என்றும், இத்தாலியன் காதலின் மொழி என்றும் கூறுவது ஒருபுடை ஒக்குமெனின், தமிழ் இரக்கத்தின் மொழி

எனலுமாம்.’

இவ்வாறு பக்தி மொழியாகப் பாராட்டப் பெறும் தமிழ் மொழியினை-நாயன்மார்களும், ஆழ்வார்களும் கன்முறையில் வளர்த்த கற்றமிழினைப் பிற்காலத்தே குமரகுருபரரும், சிவப்பிரகாசரும், தாயுமானவரும் இராமலிங்கரும் தோன்றிப் பக்திப் பனுவல்கள் பல

வா.-10