பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘150 == வாழ்வியல் நெறிகள்

பாடினர். இவர்களால் சைவ சமயமும் சமரச நோக்கும் வளர்ந்தன. இவர்கள் பாடிய பாடல்கள் இலக்கிய உலகில் புதிய தி ரு ப் ப ங் க ைள ஏற்படுத்தின எனலாம்.

முதலாவது இவர்தம் வாழ்வு குறித்தும் படைப்பு கள் குறித்தும் ஒரளவு காண்போம்.

| பதினேழாம் நூற்றாண்டின் இணையிலாப் புலவராய்த் திகழ்பவர் குமரகுருபரர் ஆவர். திக்கெலாம் புகழும் திருகெல்வேலி மாவட்டத்தில் பூரீவைகுண்டம் என்னும் திருத்தலத்திற்கு அருகில் உள்ள கைலாச புரத்தில் சைவ வேளாள மரபில் சண்முக சிகாமணிக் கவிராயருக்கும் சிவகாம சுந்தரி அம்மையாருக்கும் மகவாய் பிறந்த இவர் ஐந்து வயது வரை பேசாத மூங்கையாய் இருந்தார். கவலையுற்ற தாய் தந்தையர் திருச்செந்துார் சென்று செந்திலாண்டவன் சக்கிதியில் குழந்தையைக் கிடத்திக் கந்தவேள் அருள் வேண்டிப் பாடு கிடந்தனர். செந்திலாண்டவன் அருளால் பேசும் சக்தி பெற்ற குமரகுருபரர் நாளடைவில் கவிதை இயற்றும் ஆற்றலும்பெற்றார். இவர் பாடிய மீனாட்சி யம்மை பிள்ளைத் தமிழ்’, பிள்ளைத் தமிழ் இலக்கி யத்தில் சிறப்பு வாய்ந்த நூலாகும்.

மதுரைச் சோமசுந்தரக் கடவுள் மீது பாடிய ‘மதுரைக் கலம்பகம் சொற்சுவை பொருட்சுவை மிகுந்தது. இவர் பாடிய நீதிகெறி விளக்கம் கல்வி பற்றிய இவர்தம் சிந்தனையைக் கவினுறக் கிளத்தி கிற்கிறது. திருவாரூரிற் பாடிய திருவாரூர் கான்மணி மாலை'யும் சிறப்புடையது. சிதம்பர மும்மணிக்