பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 151 |

கோவை தமிழிற்கும் புதிய அணியாய் அமைந்தது.’ *காசிக் கலம்பகம்’, ‘சகலகலா வல்லி மாலை காசியில் இவராற் பாடற்பெற்ற சிறந்த காவல்களாகும். தம் குருநாதர் மீது இவர் பாடிய “பண்டார மும்மணிக் கோவை சிறப்புடைய நூலாகும். வடகாடு சென்று, இந்துஸ்தானி மொழி கற்று, டெல்லி பாதுஷாவின் மதிப்பினைப் பெற்று, காசியில் ஒரு மடம் கட்டிச் சைவ சமயம் வளரப் பாடுபட்டார். தமிழ் இலக்கிய வரலாற்றில் இவர் ஒரு தனித்த சிறப்பிடத்தினை ப் பெறுகிறார்.

சிவப்பிரகாசர் பதினெட்டாம் நூற்றாண்டின் இனையிலாப் புலவர் ஆவர். கற்பனைக் களஞ்சியம்’ என்று பாராட்டப் பெறுபவர். வீரசைவ சமயத்தைச் சார்ந்த இவர், அச்சமயத்தை வளர்க்கப் பெரிதும் பாடு பட்டார். தொண்டைமாட்டுத் துறைமங்கலம் என்னும் ஊரினர். தருமபுர ஆதீன வித்துவான் வெள்ளியம்பலத் தம்பிரானிடம் கல்வி பயின்றார். திருச்செந்தூர் முருகன் மீது கிரோட்டக யமக அந்தாதி பாடினார். இதழ்கள் ஒன்றோடு ஒன்று பொருந்தாமல் வரும் சொற்களை அமைத்துப் பாடப் பெறுவது இந்நூலின் தனிச் சிறப்பாகும்.

சைவ சமய குரவர் கால்வர்மீது இவர் கொண்ட ஆரா அன்பினைத் தம் கால்வர் கான்மணி மாலை'யில் புலப்படுத்தியுள்ளார். வீர சைவ சமயத்தின் பெருமை யினை விளக்கும் காப்பியமாம் பிரபுலிங்க லீலை” இவர் இயற்றிய நூல்களில் தலைசிறந்த நூலாகக் கருதப்படுகின்றது. இந்நூலில் சிவப்பிரகாசரின் கற்பனைச் சிறப்பினையும் சொற்பொருள் கயத்தினை'