பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 வாழ்வியல் நெறிகள்

யும் காணலாம். கன்னெறி இவர் இயற்றிய நீதி நூலாகும். திருவண்ணாமலையில் கோயில் கொண் டிருக்கும் அருணாசலேசுவரர் மீது பாடப் பெற்றது. “சோணசைலமாலை"யாகும். திருக்கோவையார்க்கு அடுத்தபடியாகக் கருதப் பெறும் திருவெங்கைக் கோவை’ இவரது படைப்பேயாகும்.

பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே சமயத் துறையில் தெளிந்த அறிவினைப் பெற்று ஒளிவீசித் திகழ்ந்தவர் தாயுமானவர் ஆவர். திருச்சிராப் பள்ளியில் மலைக்கோட்டை யில் எழுந்தருளியிருக்கும் சுவாமியின் திருப்பெயர் தாயுமானவர் என்பதாகும். இவர் தந்தையார் பெயர் கேடிலியப்பப் பிள்ளை; தாயார் பெயர் கஜவல்லி அம்மை என்பதாகும். திருமறைக் காட்டில் சைவ வேளாளர் குடியிற் பிறந்து, மெளன குருவிடம் கல்வி பயின்ற இவர், வட மொழி, தென்மொழி இரண்டிலும் புலமை பெற்றுத் திரிசிர புரத்தில் அக்காலத்தில் காயக்கப் பேரரசின் பிரதி நிதியாக இருந்து ஆட்சி கடாத்திய விசயரகுநாத சொக்கலிங்க நாயக்கரிடம் வேலையில் அமர்ந்து, பின்னர்த் துறவு பூண்டார். யோக ஞானங்களில் சிறந்த இவர், சைவ சமய உண்மைகளையும், சித்தாந்தக் கொள்கைகளையும் தம் பக்திப் பாடல் களில் தெளிவாக உணர்த்துகின்றார்.

“எல்லாரும் இன்புற் றிருக்க கினைப்பதுவே அல்லாமல்

வேறொன் றறியேன் பராபரமே’

என்ற உயர்ந்த குறிக்கோளினைக் கொண்டு சமரக ஞானம் பிறங்கிட வாழ்ந்தவர் இவராவர்.