பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 153

உறவினரின் வற்புறுத்தலால் மட்டுவார்குழலி என்னும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு சில காலம் இல்லறத்தில் ஈடுபட்டு அதன் பயனாகப் பிறந்த குழந்தைக்குக் கனகசபாபதி என்னும் பெய ரிட்டார். இவருடைய பாடல்கள் வாழ்விற்கு அமைதி தரும் போக்கின எனலாம்.

பத்தென்பதாம் நூற்றாண்டில் சமயத்துறையில் ஓர் ஒளிவிளக்காய்த் திகழ்ந்தவர் இராமலிங்க அடிகளாவர். தென்னார்க்காடு மாவட்டம் மருதுாரில் பிறந்த இவர், சென்னையிலும் கருங்குழியிலும் சில காலம் வாழ்ந்து இறுதியில் வடலூரில் தமது ஐம்பத் தொன்றாம் வயதில் மறைந்தார். இவருடைய தந்தை யார் பெயர் இராமையாபிள்ளை; தாயார் பெயர் சின்னம்மாள் . இ ள ம் வயதிலேயே கல்வி கேள்விகளிற் சிறந்து விளங்கிய இவர், மனுமுறை கண்ட வாசகம்’ என்னும் தமிழ் உரைகடை நூலை எழுதியுள்ளார். இவரியற்றிய திருவருட்பா கொல் லாமை என்னும் ஜீவகாருண்ணிய ஒழுக்கத்தினைச் சிறக்கப் பேசுகின்றது.

கண்மூடிப் பழக்கங்கள் மண் மூடிப் போக வேண்டும் என்றும், சாதிசமயச் சழக்குகள் மடிய வேண்டும் என்றும், சன்மார்க்கம் தழைக்க வேண்டும் என்றும், பாரக மடங்கலும் பசிப்பிணி அகல வேண்டும் என்றும் தம் வாழ்காள் முழுதும் பாடுபட்ட சீர்திருத்தச் செம்மல் இவராவர். தம் வாழ்க்கையில் அற்புதங்கள் பலவற்றை நிகழ்த்திய இவர்தம் மறைவு இன்றும் சர்ச்சைக்குரியதாக விளங்குகின்றது. ‘சாகாக் கல்வி’ என்றும், சாகாத வாழ்வினை இச்சகத்