பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 155

கிற்கும் பெற்றித்தாகும். இன்னுஞ் சொல்லப் போனால் கவிதையைப் படைக்கும் கவிஞன் பிரம்மா என்னும் படைப்புக் கடவுளின் படைப்பாவான். அவன் காலத்தில் அழியக் கூடியவன்; ஆனால் அவன் படைத்த கவிதையோவெனில் காலங்கடந்தும் வாழும் கீர்மைத்தாகும். இதனையே குமரகுருபரர் பின்வரு மாறு ஒரு பாட்டில் குறிப்பிட்டிருக்கக் காணலாம்.

“கலைமகள் வாழ்க்கை முகத்தது என்னும்

மலரவன் வண்டமிழோர்க்கு ஒவ்வான் மலரவன்செய் வெற்றுடம்பு மாய்வனபோல் மாயா புகழ் கொண்டு மற்றவர் செய்யும் உடம்பு.’

இவருடைய பாடல்களின் சிறப்புக் குறித்து டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார் :

“பூரீ குமரகுருபர சுவாமிகளுடைய செய்யுட்களில் தனிச்சிறப்புப் பெற்று விளங்குவது அவற்றின் இன்னோசையேயாகும். ஏனைப் பாட்டுக்களிலிருந்து இவருடைய செய்யுட்களைச் செவிப் புலன் கொண்டே வேறுபடுத்தி விடலாம். இவற்றைக் கேட்கும்போது நமக்குத் தென்பாண்டி காட்டுப் பொருகை கதியின் ஒட்டம் ஞாபகத்துக்கு வருகின்றது. சொற்களும் சொற். றொடர்களும் ஒன்றனோடு ஒன்று செவிக்கினிமை தரும்வண்ணம் ,பொருந்தி அமைந்துள்ளன. பொரு ளில்ே கருத்துச் செல்வதற்கு முன் செய்யுட்களின் ஓசை நம் கருத்தை இழுக்கின்றது.

சொல்லின்பத்தை விளைவிப்பனவாகிய கருவிகள் அனைத்தும் கம்பீரமாகச் செல்லும் இவருடைய செய்யுள கடையில் நன்கு அமைந்துள்ளன. எவ்வகை