பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 வாழ்வியல் நெறிகள்

யாப்பையும் பேராற்றலையும் அமைக்கும் இம்முனிவ ருக்குச் சொற்களும் தொடை நயங்களும் சிறிதும் முயற்சியின்றி இயல்பாகவே வந்து அமைகின்றன. வழியெதுகையும் முரண்டொடையும் அச்செய்யுட் களின் ஒசையைப் பொலிவுறுத்துகின்றன. சந்தத்தை இவர் மிக எளிதின் அமைத்துள்ளார்.

‘விருத்தங்களிலும் வெண்பாவிலும் இவருக்கே உரிய ஒசைகயம் மேம்பட்டு விளங்குகின்றது. அகவல் களிலும் வேறு செய்யுட்களிலும் இவருடைய கருத்துக் கள் தெளிவாக விளக்கப் பெற்றுள்ளன.”

குமரகுருபரருக்குத் தமிழ்மொழிமாட்டுத் தனியாத காதல் இருந்தது. தமிழைத் தெய்வத் தமிழ்” என்பர் இவர். இளமைக்காலத்தே கந்தவேளிடத்து இவர் முற்றிய தமிழ்ப் புலமையையே முறையே வேண்டு கின்றார்.

“ ஆசுமுத னாற்கவியு மட்டாவ தானமுஞ்சீர்ப்

பேசுமியல் பல்காப் பியத்தொகையும்-ஓசை

எழுத்துமுத லாமைக் திலக்கணமுங் தோய்ந்து

பழுத்த தமிழ்ப்புலமை பாவித்து’ ‘அ

முற்றிய வயதிலும் கலைமகளை வேண்டும் போதும் தமிழ்ப் புலமையே வேண்டுமென வேண்டு கிறார்.

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய் தர நாற்கவியும் பாடும் பணியிற் பணித்தருள்வாய்’ “ஆ

குமரகுருபரர் முருகப் பெருமானும் பரமசிவனும் ஒருவரே எனுங் கொள்கை உடையவர். கந்தர் கலி வெண்பாவில் இவர் பரமசிவனுக்குரிய இயல்புகளை முருகக் கடவுளுக்கு அமைத்துப் பாடியுள்ளார்.