பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 வாழ்வியல் நெறிகள்

(8) சிதம்பரச் செய்யுட் கோவை (9) பண்டார மும் மணிக்கோவை (10) காசிக் கலம்பகம் (11) சகல கலாவல்லி (12) கைலைக் கலம்பகம் (13) காசித்துண்டி விகாயகர் பதிகம்.

இப்பதின் மூன்றனுள்ளும் கைலைக் கலம்பகத்தில் பல செய்யுட்கள் காணப்படவில்லை. காசித்துண்டி விகாயகர் பதிகம் முழுவதுமே கிடைக்கவில்லை.

எல்லா வகை யாப்பு வடிவங்களிலும் பாடவல்லவர் குமரகுருபரர் என்பது பின்வரும் அட்டவணையால் விளங்கும். இவ் அட்டவணையால் அவர் பாடிய பாடல்கள் எவ்வெவ் யாப்பு வகையின் பாற்பட்டு அமைந்துள்ளன என்பது தெளிவாகக் காணலாம்.

வெண்பா-189 வெண் டாமுடை-5 வெண்டுறை-5 வெளிவிருத்தம்-2 ஆசிரியப்பா-41 ஆசிரியத்தாழிசை-2 ஆசிரியத்துறை-4 ஆசிரிய விருத்தம்- 298 கலிப்பா-38 கலித்தாழிசை-9 கலித்துறை-96 கலிவிருத்தம்-6 வஞ்சிப்பா-2 வஞ்சித்தாழிசை-1 வஞ்சித்துறை-3 வஞ்சி விருத்தம்-4

மருட்பா-6