பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 16}.

இவ்வாறாகக் குமரகுருபரர் பல்வேறு யாப்பமைதி களைக் கையாண்டு, கடவுளர் பலர் மீதும் பாடல்கள் புனைந்து, தெய்வத் தமிழ் இலக்கியம் செழிக்கச் சிறக்கத் தொண்டு செய்துள்ளார் எனலாம்.

சிவப்பிரகாசர் வீரசைவத்தை வளர்ப்பதற்கென்றே வாழ்ந்தவர். வீரசைவக் கருத்துகளைப் பெய்து *பிரபுலிங்கலிலை’ என்னும் காப்பியம் சமைத்தவர். இக்காப்பியம் இவருக்குக் கற்பனைக் களஞ்சியம்’ என்னும் சிறப்புப் பட்டம் தந்தது எனலாம். தேவார மூவரிடத்தும் மாணிக்கவாசகரிடத்தும் இ வ ர் அளவிலா அன்பு செலுத்தியவரென்பது இவரியற்றிய சிகால்வர் நான்மணிமாலை"யால் விளங்கும். மணி வாசகப் பெருந்தகையின் திருவாசகத்தில் இவர் பெரிதும் ஈடுபட்டு உளம் உருகி நின்றவர் என்பதனைப் பின்வரும் கால்வர் கான்மணி மாலை"ப் பாடற்பகுதி விளக்கும்.

திருவா சகமிங் கொருகா போதின் கருங்கன் மனமும் கரைந்துகக் கண்கள் தொடுமணற் கேணியிற் சுரங்துநீர் பாய மெய்ம்மயிர் பொடிப்ப விதிர்விதிர்ப் பெய்தி அன்ப ராகுரு ரன்றி மன்பதை யுலகில் மற்றைய ரிலரே.’

  • யான் பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்’ என்ற பரந்துபட்ட கொள்கையிற் பாரில் வாழ்க்தவர் தாயுமான தயாபரர் ஆவர். மேலும் அவர்,

எல்லாரும் இன்புற் றிருக்க கினைப்பதுவே

அல்லாமல் வேறொன் றறியேன் பராபரமே’

-வராவர : 221