பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 வாழ்வியல் நெறிகள்

என்று வாழ்ந்தவரான காரணத்தால் இவர் சமயப் பொதுமை கண்ட சமசர ஞானியெனப் போற்றப் பெறுகின்றார்.

தாயுமானவர் பாடியுள்ள பாடல்கள் 1454 ஆகும்; இவற்றுள் மாலை 587, கண்ணிகள் 865, அகவல் 1, வண்ணம் 1 அடங்கும்.

தமக்கு இறைவன் குரு வடிவல் தோன்றி அறம் பொருள் இன்பம் வீடு எனும் காற்பேற்றினை உணர்த் தியதாகக் குறிப்பிடுகின்றார்:

அறம் பொரு ளாதி திறம்படு நிலையில் குருவா யுணர்த்தி.

மேலும் இவர் வெறும் பேச்சால் மட்டும் கடவுளின்பம் கிட்டிவிடாது என்று குறிப்பிடுகின்றார்:

வாசக ஞானத்தால் வருமோ சுகம்’.

சகேட்டதையே சொல்லுங் கிளிபோல நின்னருளின் நாட்டமின்றி வாய்பேசல் கன்றோ பராபரமே’.

இவற்றால் இறைவனை நூலறிவால் அறிய முடியாது. ஞான அறிவால்தான் அறிய முடியும் என்னும் தாயுமானவரின் உள்ளக்கிடக்கை புலனா

கின்றது.

தாயுமானவர் இறைவனைத் தாயாகவும் தலைவ னாகவும் எண்ணி இவ் இருவகையிற் பாடல்களைப் புனைந்துள்ளார்.