பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 1.65

னுடைய பாடல்கள் தமிழ் மொழிக்கும் தமிழகத்துக் கும் தாயுமானவர் அளித்த செல்வங்களாகும்.’

தாயுமானவர்,

- நெஞ்சகமே கோயில் கினைவே சுகந்தம்

அன்பே மஞ்சன நீர் பூசை கொள்ள வாராய் பராபரமே’

என்று பாடியுள்ள கருத்தினை கோக்க ஒரு தெளிவு பிறக்கக் காணலாம். உள்ளம் கள்ளமின்றி இருந்தால் இறைவன் உறையும் திருக்கோயிலாகும் என்பது தான் அது.

இராமலிங்கர் வாடிய பயிரைக் கண்டபோதெல் லாம் தம் உள்ளம் வாடியவர். அருளாளராய்ப் பிறங்கியவர்:

- அம்பலப் பாட்டே அருட்பாட்டு

அல்லாத பாட்டெல்லாம் மருட்பாட்டு”

என்றும்,

தொடுக்கின்றேன் மாலைஇது மணிமன்றில் கடிக்கும்

துரை அவர்க்கே அவருடைய துாக்கிய கால்மலர்க்கே”

என்றும் அவர் பாடியுள்ளார். எல்லையில் கூத்து கிகழ்த்தும் தில்லைக்கூத்தனைப் பாடும் பொன்னம் பலப்பாட்டே பாட்டு என்றும், மற்றும் அவனைப் போற்றிப் பாடாதவை வெறுஞ் சொற்களின் ஈட்டமே என்றும் இராமலிங்கர் கூறுகின்றார்.

ஆட்டுக்குக் காலெடுத்தாய் கினைப்பாடலர் ஆங்கு இயற்றும் பாட்டுக்குப் பேர் என்கொல்? பண் என்கொல்

நீட்டிய அப்பாட்டெழுதும் வா.-11