பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலகப்பிரமணியன் 19

கெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் செல்வம் அன்று; தன் செய்வினைப் பயனே சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண் பின் மென்கண் செல்வம் செல்வம்என் பதுவே.

-நற்றிணை 210 : 5-9

என்று கற்றினைப் புலவரொருவர் கூறியிருப்பது கொண்டு உணரலாம்.

மேலும் வ ழ்வியல் கெறியாகப் பின்வரும் நற்பண்பொன்றும் பண்டை நாளில் பாராட்டப் பெற்றது. “தம்மால் கொடுக்க முடிந்த பொருளை முடியும் என்று சொல்லிக் கொடுப்பதும், தம்மால் கொடுக்க முடியாத பொருளை முடியாது என்று மறுத்து விடுவதும் ஆகிய இரண்டு பண்புகளும் கற்பண்புகள்தாம்; உதவி செய்யும் தன்மையோடு கூடிய கட்பின் தன்மைதான். இதுபோன்றே தன்னால் முடியாததை முடியுமென்று சொல்லுதலும், தன்னால் செய்யக் கூடியதை முடியாது என்று மறுத்தலும் ஆகிய இந்த இரண்டு பண்புகளும் தீய பண்புகள் தாம். தன்னிடம் உதவி காடி விரைந்து வந்த இரவலர் களைத் துன்புறுத்துவதாகும். அது மட்டுமல்லாமல் ஈவோரின் புகழ் தேய்ந்து போவதற்கான வழியுமாகும்’ என்று ஆவூர் மூலங்கிழார் என்னும் அருந்தமிழ்ப் புலவர் பாடியுள்ள திறம் வாழ்வியல் நெறியினை வற்புறுத்தும் போக்கில் அமைந்திருக்கக் காணலாம்.

ஒல்லுவது ஒல்லும் என்றாலும், யாவர்க்கும் ஒல்லாது இல் என மறுத்தலும், இரண்டும் ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே, ஒல்லாது ஒல்லும் என்றலும், ஒல்லுவது