பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 வாழ்வியல் நெறிகள்

சிவப்பிரகாசர் வீரசைவ சமயத்தைப் பரப்புவதில் முன்னின்ற புலவர் பெருமக்களில் முதலாமவர் எனலாம். வீரசைவத்தைச் சிறப்பித்துப் பாடும் இவர் பெண்ணின் பெருமையையும் போற்றினார். சைவ சமயக் குரவர்மாட்டு ஆழ்ந்த பக்தி செலுத்தியவர் இவராவர். இவர் கவிதைகளில் அளவிற்கு மீறிய கற்பனை வளத்தினைக் காணலாம். எனவே “கற்பனைக் களஞ்சியம் சிவப்பிரகாசர் என இவர் பின்வந்த பெருமக்களால் பெருமையுடன் அழைக்கப் படுகின்றார்.

இனிய கல்வாழ்விற்குத் தாயுமான தயாபரரின் பாடல்கள் பெரிதும் துணை நிற்கக் காணலாம். கீழ்க்காணும் அவர்தம் பாட லைப் படிப்பவர் சிறந்த் சிலமுடையவர்களாய் மனக்கவலையின்றி வாழ்வர் என்பது திண்ணம். அப்பாட்டின்கண் அமைந்துள்ள பொருளை முதற்கண் கண்டுவிட்டுப் பின் பாடலைக் காண்போம்.

“எத்தனை வகையாகக் கற்றாலும் உயர்ந்த அறங்களைக் கேட்டாலும் என் உள்ளம் ஒடுங்க வில்லை.’

‘கான் என்னும் அகங்காரம் என் உள்ளத்தை விட்டு எள்ளளவு கூட மறைந்து விடவில்லை.’

‘எல்லாவற்றிலும் ஆசை வைக்கும் தன்மை என் மனத்தில் குடிகொண்டுள்ளது.’

‘ஈகையும் இரக்கமும் இந்தப் பிறவியிலே நான்

காணாதவைகள்.’

“சீலம், தவம், விரதம் என்பவற்றை நான் கனவிலே கூடக் கண்டதில்லை.'