பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. குமரகுருபரர் வாழ்வும் தொண்டும்

பெருவாழ்வு

தாமிர பரணியாற்றின் வடகரையில் பூரீவைகுண்ட மென்னும் திருத்தலத்தின் அருகில் ரீகைலாசம் -என்னும் பகுதியில் வழிவழியாகத் திருமுருகப் பெருமானிடத்து நிலைத்த பக்தியும் தமிழ்ப் புலமையும் வாய்ந்த சைவ வேளாளர் குலத்துதித்த சண்முக சிகாமணிக் கவிராயருக்கும் சிவகாமசுந்தரி அம்மை யாருக்கும் சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால் பிறந்தவர், சைவமும் தமிழும் தழைக்கச் செய்த குமரகுருபரர் ஆவர்.

குமரகுருபரர் பிறந்த ஐந்தாண்டுகள் வரை பேச்சு வராத ஊமைக் குழந்தையாக இருந்தார். இதனால் கவலையுற்ற பெற்றோர்கள் திருச்செக்துருக்கு எடுத்துச் சென்று செந்திலாண்டவர் திருச்சங்கிதியில் கிடத்திவிட்டுப் பாடு கிடந்தனர். முன்னியதை முடித்து வைக்கும் முருகப் பெருமான் அருளால் பேச்சு வராத

குழந்தை பேசும் திறம் பெற்றது. அம்மட்டோ : பாடும் திறமும் பெற்றது. முருகனருளைப் பெற்ற குமரகுருபரர் கல்வியில் கல்ல தேர்ச்சி பெற்றுக் கந்தர்