பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 177:

கலிவெண்பா என்னும் நூலினை முதற்கண் பாடினார். தாம் பிறந்த தலத்தில் எழுந்தருளியுள்ள பூரீகைலாச காதர் மீது கைலைக் கலம்பகம் என்னும் ஒரு பிரபந்தம் இயற்றினார். குமரகுருபரருக்கு ஞானசாத்திரங்களே யன்றித் தமிழ் இலக்கிய இலக்கணங்களிலும் கல்ல.

புலமை வங்து சேர்ந்தது.

இதன் பயனாக மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம், திருவாரூர் கான்மணிமாலை, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ், சி த ம் ப ர மும்மணிக்கோவை, சிதம்பரச் செய்யுட் கோவை, - நீதிநெறி விளக்கம், பண்டார மும்மணிக்கோவை, சகலகலாவல்லி மாலை, காசிக் கலம்பகம் முதலான நூல்களைத் தம் வாழ்காளில் இயற்றித் தமிழிற்குத் தலைசிறந்த தொண்டாற்றியுள்ளார். இவருக்குச் சிவஞான உபதேசம் செய்தருளியவர் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனத்தில் கான்காம் பட்டத்தில் குருமூர்த்தியாக விளங்கிய பூரீமாசிலாமணி தேசிகர் ஆவா.

துறவுநிலை அருள வேண்டுமென்று தம்ஞானாசிரி யரிடம் குமரகுருபரர் கேட்க, அவர் அதற்கு முன் தலயாத்திரை செய்து வரும்படி பணித்தல் அவ்வாதின. மரபாதலின் அக் குருமகா சக்கிதிதானம் அவரைக் காசி யாத்திரை செய்து வரும்படி கட்டளையிட்டனர். காசிக்குச் சென்று திரும்பி வர நெடுங்காலம் ஆகுமே என்று கவன்ற குமரகுருபரரை நோக்கி பூரீமாசிலாமணி தேசிகர் சிதம்பரம் வரை சென்றுவரப் பணித்தார்.

அவ்வாறே சிதம்பரம் சென்று சில நூல்களை இயற்றித் திரும்பிய குமரகுருபரர் காசிக்கும் சென்றார்.