பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 178 வாழ்வியல் நெறிகள்

காசியை அக்காலத்தில் ஆண்ட டில்லி பாதுவடிாவின் மனத்தில் இடம் பெற்றுச் சிவத்தொண்டு சில காசியில் புரிய வாய்ப்பேற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எண்ணிய குமரகுருபரர் அப்பாதுவடிாவின் தாய்மொழி யாகிய ஹிந்துஸ்தானி மொழியை விரைவில் அறிந்து கொள்ள அருள்பாலிக்க வேண்டுமென்று சகலகலா வல்லி மாலை பாடிக் கலைமகள் அருளினைப் பரவினார். கலைமகள் திருவருள் வாய்க்கப் பெற்ற குமரகுருபரர் பாதுவடிாவிடம் ஹறிந்துஸ்தானி மொழி யிலேயே பேசி, அவர் மனத்தினைக் கவர்ந்து, காசியில் கேதார கட்டத்தில் மடம் கட்ட ஒர் இடம் பெற்றார்.

கேதார க ட் ட த் தி லு ள் ள கேதார லிங்கத்தை முகம்மதியர் மறைத்திருந்தன ரென்றும் குமரகுருபர முனிவர் அம்மூர்த்தியை வெளிப்படுத்தி ஆலயம் முதலியனகட்டுவித்து கித்திய கைவேத்தியங்கள் கடத்தச் செய்தன ரென்றும் இன்றும் ஆகம விதிப்படி தமிழ் காட்டு முறையில் சில திருவிழாக்கள் அங்கே நிகழ்கின்றனவென்றும் சிலர் கூறுவர்.

என்று டாக்டர் உ. வே. சாமிநாதையர் குறிப்பிடுவார். (குமரகுருபரர் சு. வ ா மி க ள் பிரபந்தத் திரட்டு; குமரகுருபர சுவாமிகள் சரித்திரச் சுருக்கம்)

செய்யுள் திறம்

தமிழ்த்தாத்தா டாக்டர் உ. வே. சாமிநாதையர்

குமரகுருபரர் பற்றிக் குறிப்பிடும் மேலும்,சில செய்திகள் மனங்கொளத் தக்கனவாகும். அவை வருமாறு :