பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

==

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 181

என்று உலகியற் பொருள்களில் எதனையும் விரும்பாத இவர் சொல்கயத்துடன் கவிபுனையும் பெற்றியினைப் பெரிதும் விரும்பி வேண்டுகின்றார். மேலும் இவர் பாடிய சகலகலாவல்லி மாலையில் காணப்பெறும் கீழ்க்காணும் பகுதிகள் இவருடைய ஆராத தமிழ்க் காதலைப் புலப்படுத்தும் எனலாம்.

காடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர காற்கவியும் பாடும் பணி யிற் பணித்தருள்வாய்

-சகலகலாவல்வி மாலை. 2

பண்ணும் பரதமுங் கல்வியும் தீஞ்சொற் பனுவலும் யான் எண்ணும் பொழுது எளிது எய்த கல்காய்

- சகலகலா வல்லி மாலை. 10

தமிழின் சிறப்பினைப் பல்லாற்றானும் இவர் தம் முடைய செய்யுட்களிற் புலப்படுத்தியுள்ளார் என்று டாக்டர் உ. வே. சா. அவர்கள் பின்வருமாறு பட்டிய லிட்டுக் காட்டுவர்.

அருந்தமிழ்

இசை முத்தமிழ் கலைத்தமிழ்த் தீம்பாலமுதம் கொத்து முத்தமிழ் கொழித்தெடுத்துத் தெள்ளித் தெளிக்குங் தமிழ் கொழி தமிழ்

கொழுத்த தமிழ்

சங்கத் தமிழ் செழுந்தமிழ்ச் செல்வம்

செந்தமிழ்த் தெள்ளமுது சொற்சுவை பழுத்த தொகைத்தமிழ்

வா.-12