பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 வாழ்வியல் நெறிகள்

இல் என மறுத்தலும் இரண்டும் வல்லே

இரப்போர் வாட்டல் அன்றியும், புரப்போர்

புகழ் குறை படுஉம் வாயில்.

- புறநானூறு 196 1.7

இறுதியாக, வாழ்வியல் நெறிகளுள் காலங் கடந்தும் எக்காலத்திற்கும் இயைவதாக ஓர் அரிய கருத்துக் கருவூலத்தைக் கணியன் பூங்குன்றனார் என்னும் புலவர் கூறிச் சென்றுள்ளார். அரிய வாழ்வியற் கோட்பாடுகளைத் தன்னகத்தே கொண் டிலங்கும் அவரது பாட்டு ஒரு சாகாக் கவிதை எனச் சாற்றும் தகுதி வாய்ந்ததாகும்.

‘எல்லாம் கமது ஊரே, எவரும் கம் உறவினர் களே! திமையும் கன்மையும் பிறரால் கமக்கு வருவன வல்ல; நம்மால் நமக்கே ஏற்படுத்திக் கொள்வதாகும் அவை. பிறரை கொந்து கொள்ளுதலும், பின்னர்த் தனிந்து போதலும் அவை போன்றே அமைந்துள்ளன. இவ்வுலகில் தோன்றிவிட்டாலே ஒரு காள் சாதல் வேண்டும் என்பது உறுதி. அஃதொன்றும் புதிய நிகழ்முறை அன்று. அக்காரணத்தாலேயே வாழ்தல் என்பதனையும் மகிழ்ச்சிக்குரிய செயலாகக் கருதுவ தில்லை. ஒரு வெறுப்பு வந்துற்ற காலையில் வாழ்க்கையே துன்பம் என்று வருந்திக் குலைந்து போவதும் இல்லை. மின்னுகின்ற மேகம் குளிர்ந்த மழையைப் பொழிந்து, அம்மழை நீர் கற்களைப் புரட்டிக் கொண்டு ஆற்று நீராக ஒட, அவ் ஆற்று நீரின் போக்கிலேயே செல்லும் ஒடம் போன்று ஆருயிர்கள் ஊழின் போக்கிலேயே செல்லும் என்பது வாழ்க்கையில் அநுபவப்பட்ட கம் முன்னோர்கள் கண்ட உண்மையாகும். எனவே பெருமைமிக்க