பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 21

பெரியோர்களை வியந்து பாராட்டிக் கொண்டிருத்தலு மில்லை; சிறியோரை இகழ்ந்து கொண்டிருப்பது மில்லை’ என்று கணியன் பூங்குன்றனார் குறிப்பிட் டிருக்கக் காணலாம்.

யாதும் ஊரே யாவரும் கேளிர்; தீதும் கன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன? சாதலும் புதுவது அன்றே! வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின் இன்னாது என்றலும் இலமே! மின்னொடு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொழுது இரங்கும் மல்லர்பேர் யாற்று நீர்வழிப் படுஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படுஉம் என்பது திறவோர் கட்சியில் தெளிந்தனம் ஆதலின், மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

புறநானூறு 1 192

‘வாழ்தல் வேண்டிப் பொய் கூறேன்; மெய் கூறுவல்’ என்பது அன்று கம் முன்னோர்கள் கண்ட வாழ்வியல் நெறியாகும்.

இது கா று ம் கூறியவாற்றான் வாழ்வியல் கெறிகள் சில நம் முன்னோர் கண்ட வாழ்க்கைத் தெளிவினை உணர்த்தி கிற்கக் கண்டோம். தொல் பழங்குடியினராகிய தமிழர்கள் தாம் வாழ்ந்த வாழ்க்கை யினைப் பின்வரும் வழித்தோன்றல்களும் தெரிந்து பின்பற்றி வாழ்வு சிறக்க வாழ வேண்டும் எனும் உயரிய கோக்கத்துடன் கவிதையில் வடித்துச் சென்றனர் என்றும் ஒருவாறாக உய்த்துணர்ந்து அறியலாம்.