பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7.192 வாழ்வியல் நெறிகள்

உணர்ந்து, கற்பனையோடு வளர்த்து, கலைவளம் தந்து சொற்களால் புலப்படுத்துவது கல்ல இலக்கியம் ஆகும்’ என்று கல்ல இலக்கியத்தின் அமைப்பை விளக்குகிறார் டாக்டர் மு. வ.

இவ்விலக்கியம் பற்றிய கல்வி, இலக்கியக் கொள்கை, இலக்கியத் திறனாய்வு, இலக்கிய வரலாறு என மூவகைப்படும். அவற்றுள் இலக்கியக் கொள்கை என்பது, இலக்கியத்தின் பொருள். புறநிலை அமைப் பாகிய அதன் வடிவம், வெளியீட்டு முறை என்ற மூன்றுமே ஆகும். இவற்றைக் குமரகுருபரர் தம் இலக்கியங்களில் எவ்வெவ்வாறு உணர்த்துகிறார் என்பதைக் காண்பதே கோக்கம்.

இலக்கியம், செய்யுள், உரைகடை ஆகிய இரு வடிவங்களிலும் அமைகினறன. அகப்பாட்டு, புறப் பாட்டு, பக்திப்பாட்டு, காவியம் ஆகியன செய்யுள், வடிவில் அமைந்தவை. இன்று தொடர்கதை,சிறுகதை, கட்டுரை முதலியன உரைகடையில் அமைகின்றன. நாடகம், செய்யுள், உரைகடை ஆகியன இரண்டிலும் அமைகின்றன. குமரகுருபரரின் பாடல்கள் பக்திப் பாடல்களாய் அமைந்துள்ளன.

குமரகுருபரரின் பிரபந்தங்கள்

குமரகுருபரர் யாத்த பிரபந்த நூல்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. தேவர்.பிரான் கவிராயர் என்பவர் தாம் இயற்றிய சிறப்புப் பாயிரத்தில்.