பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 195

சொல்லாட்சி, சிதம்பரச் செய்யுட் கோவை என்ற பிரபந்தத்தின் தலைப்பாகவே வந்திருக்கிறது.

இலக்கியத்தின் உயர்வு குறித்துக் குமரகுருபரரின் கருத்து

கலைகளில் சிறந்தது இலக்கியக் கலையே. கிலையில்லாமல் மாறும் அழகின்பத்தை நிலைபெறச் செய்ய இலக்கியம் பயன்படுகிறது. மேற்கு வானத்தில் மாலையில் காணப்படும் அக்தி அழகு கொடிக்கு கொடி மாறிக் கொண்டே இருக்கிறது. உள்ளம் வியந்து போற்றும் அழகு மிக்க சிறந்த காட்சியை வானத்தில் கண்டு மகிழ்கிறோம். சிறிது கேரம் கழிந்த பிறகு மீண்டும் அதைக் கண்டு மகிழ விரும்பினால், அந்த அழகு புலன்களுக்கு எட்டாத ஒன்றாக ஆகிவிடு கிறது. ஒரு காள் ஒரு வேளை உள்ளத்தில் தோன்றிய .புதிய உணர்ச்சி மற்றொருகாள் மற்றொரு வேளையில் தோன்றுதல்அரிதாகிறது. இவ்வாறு மறைந்து மாறிப் போகும் அழகையும் உணர்ச்சியையும், படைப்பாளி தான் படைக்கும் இலக்கியத்தின் மூலம், கிலையுள்ள தாக ஆக்கிவிடுகிறான். அத்தகைய படைப்பாளி,உயிர் களைப் படைக்கும் பிரமனைக் காட்டிலும் உயர்ந்தவன் என்கிறார் குமரகுருபரர் ஒரு பாடலில்.

கலைமகள் வாழ்க்கை முகத்தது எனினும் மலரவன் பண்டமிழோர்க்கு ஒவ்வான்-மலரவன்செய் வெற்றுடம்பு மாய்வனபோல் மாயா புகழ்கொண்டு மற்றிவர் செய்யும் உடம்பு’

என்பதே அந்தப்பாடல்.