பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 வாழ்வியல் நெறிகள்

இலக்கியக் கொள்கைகள் பொருள் பற்றிய கொள்கைகள்

எந்த ஒரு பொருள் பற்றியும் இலக்கியம் படைக் கலாம். இன்ன பொருள் பற்றிப் பாடலாம்; இன்ன பொருள் பற்றிப் பாடலாகாது என்ற வரையறை: இல்லை. வெண்ணிலவு, செங்கதிர், விண்மீன், கருமுகில், மலை, காடு, ஆறு,கடல்,மான்,முயல், கிளி: மயில்,குழந்தை முதலியவைகள் பற்றியும் பாடலாம், உயர்ந்த இமயமலையையும் பாடலாம். சிறிய குண்டு சி யைப் பற்றியும் பாடலாம். பாட்டின் பொருள் உயர்ந்த தாயினும் பாடுவோரின் அனுபவம் உயர்ந்ததாய் இல்லாவிடில், அப்பாடல் சிறக்காது. குமரகுருபரர் உயர்ந்ததாம் இறைபொருள் பற்றி, உயரிய தம் அனுபவம் கொண்டு பாடியவர்.

வாயே நீ வாழ்த்து கண்டாய், மதயானை உரிபோர்த்துப் பேய் வாழும் காட்டகத்தே ஆடும் பிரான் தன்னையே வாயே நீ வாழ்த்துக் கண்டாய்.” என்ற திருநாவுக்கரசர் வாக்குக்கேற்ப, இறைவனை வாழ்த்துவதையே, வாழ்த்திப் பாடுவதையே தம் வாழ்க்கைப் பணியாகக் கொண்டவர் குமரகுருபரர். எப்பாரும் எப்பதமும் எங்கனும் சென்றே இறைவன் அருட்புகழை இயம்புவதையே அன்றாடப் பணியாகக் கொண்டார் அவர்.

சைவ வேளாளர் குலத்தில் பிறந்து, ரீ மாசிலா மணி தேசிகர் எனும் சைவ ஆசிரியருக்கு அடிய வராகிச் சைவ சக்கியாசம் பூண்டு வாழ்ந்த இவர். சைவக் கடவுளர்களையே பாடல் பொருளாகக் கொண்டு பாடியுள்ளார். விநாயகரும் கந்தனும்