பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 199

என்று இவர் முருகனைப் பாராட்டுவதனால், இவர் அக்கடவுளை மறப்பினும், இவர் கா மறவாது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

இம் முனிவர்பிரானுடைய் காமமாகிய குமரகுருபரர் என்பது முருகனுடைய திருகாமங்களில் ஒன்றே. இவர் அப்பெயராலேயே முருகனை,

“அருள்குடி கொண்ட குமரகுருபரன்’

எனக் குறிக்கிறார்.

முருகு என்றால் அழகு, எழில் எனப் பொருளாகும். இவர் ‘இயலு நடையும் வடிவும் அழகும் அரியன்.’ “அழகு கனிந்து முதிர்ந்த இளங்கனி’ - என்று போற்றுகிறார். எழுதற்கரிய அத்திரு வுருவை முருகனடியார்கள் விழிகளிலும் மனத்திலும் எழுதி எழுதி இன்புறுவார்கள் என்பதை ,

வடிவி னழகும் எழுத வரிய புயமும் கறிய செச்சையும் மருமம் விரவு குரவு மரையின் மணியும் மணிகொள்

கச்சையும் கடவு மயிலு மயிலும் ஒழுகு கருணை வதன பத்மமும் கமல விழியும் விழியும் மனமும் எழுதி எழுதி கித்தலும் அடிகள் எனவுன் அடிகள் பணியும் அடியார்.’

எனப் பாடுகிறார்.

விநாயகர்

காப்புச் செய்யுட்களில் விகாயகரைப் பாடும் இவர் மதுரைத் தலத்திலுள்ள சித்தி விநாயகரையும், வேலூரிலுள்ள கற்பக விநாயகரையும், சிதம்பரத்தில் உள்ள கற்பக விகாயகரையும் பாடியுள்ளார். இவர்,