பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. தமிழில் நிலமும் பொழுதும்

இயற்கையோடு இயைந்த இன்ப வாழ்வு வாழ்ந்த வர்கள் நம் முன்னோர். அவர்கள் தங்கள் வாழ்க்கைக்கு அடித்தளமாக இயற்கை அமைந்திருப்பதை உணர்ந்து இயற்கையைப் போற்றி வாழ்ந்தனர். மனித வாழ்க்கைக்கு இயற்கைப் பொருட்கள் துணை புரிவதை உணர்ந்து இயற்கையைத் தனது வாழ்க்கைக் காகப் பயன்படுத்தத் தொடங்கினர். முதலில் இயற்கையைப் புரிந்து கொள்ளாத நிலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக இயற்கைப் பொருட்களைப் புரிந்து அதைப் பயன்படுத்தத் தொடங்கினர். அவ்வாறு அவர்கள் இயற்கையாகிய கிலத்தையும் பொழுதையும் பயன்படுத்திய, இவற்றின்மீது அவர்கள் கொண்டிருந்த எண்ணத்தையும் இ ல க் கி ய, இலக்கணங்களின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இலக்கியம் வாழ்க்கையின் கண்ணாடி என்பர். ஏனெனில் மக்கள் வாழ்க்கையிலிருந்து பெறப்பட்ட நிகழ்ச்சிகளை ஒருங்கு தொகுத்துச் சுவைபட இலக்கியம் படைப்பதால் இலக்கியத்தின் மூலம் ஒரு சமுதாயத்தை இனங்கான முடியும். அவ்வகையில் தமிழில் கிலமும் பொழுதும் என்பதைப் பற்றி இலக்கண, இலக்கியங்கள் வழிக் காணலாம்.

---