பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 வாழ்வியல் நெறிகள்

‘ஒரு கடவுள், ஒரு மொழி, ஒரு கலை, ஒரு நாடு என்னும் வரையறை யின்றிப் பல கடவுளரையும் பலமொழிக் கருத்துக்களையும், பல கலைச் செய்தி களையும் பலகாட்டு வருணனைகளையும் இவருடைய செய்யுட்களிற் காணுகின்றோம். இக்காட்டின் தென் திசையிலுள்ள செக்துாரையும், வடகாட்டிலுள்ள காசியையும் இவர் கண்டறிந்து பாடுகின்றார். தாம் பிறந்த பாண்டி காட்டையும், குருவைப் பெற்ற சோழ காட்டையும், வாழ்ந்து வந்த கங்கைக் கரையையும் வருணிக்கின்றார். சிவபெருமான் முதல் கலைமகள் வரையுள்ள தெய்வங்களைப் பாராட்டு கின்றார். சைவ பரிபாஷைகளோடு வைணவப் பரி பாஷைகளையும் ஒருசார் அமைக்கின்றனர். இவற்றால் இவர், ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்னும் மனோபாவமும், விரிந்த உலகியலறிவம் உடையவர் என்பதை உணரலாகும்’ என்பர். சி

அகத்திணை

குாமகுருபரர், அகப் பொருள் இலக்கணச் செய்திகளை எடுத்தாள்வதிலும், அவ்விலக்கண

அமைதிபெறச் செய்யுள் அமைப்பதிலும் மிக வல்லவர். அகத்திணைக்குரிய முதற்பொருள் இரண்டனுள் ஒன்றாகிய கிலம், குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், கெய்தல் என ஐவகைப்படும். குமரகுருபரர் தம் பிரபந்தங்களில் ஆங்காங்கே சில நிலங்களையும் அவற்றின் கருப்பொருள் பற்றிய செய்திகளையும கூறுகிறார்.

மலையும் மலையைச் சார்ந்த இடமும் குறிஞ்சி, அதற்கு முருகக் கடவுள் தெய்வம். தமிழர் மரபு குமரகுருபரர் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழில்