பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 வாழ்வியல் நெறிகள்

தலைவனும் தலைவியும் எதிர்ப்படுங்காலத்து, அவர்கள் கெஞ்சம் ஒன்றுபடும் உள்ளப்புணர்ச்சியைத் தடாதகைப் பிராட்டியார் திருக்கயிலாயத்தில் சிவ பெருமானைக் கண்டபோது, அப்பிராட்டியார் திருமார்பிலிருந்த மூன்றாவது ககில் மறைந்த செய்தி யைக் கூறும்போது, அக்ககில் காதலரோடு உள்ளப் புணர்ச்சி செய்யும் கருத்தால் உள்ளே ஒடுங்கிய தென்று கூறுகிறார்.

முலை மூன்றிலொன்று கைவந்த கொழு கரொடும் உள்ளப் புணர்ச்சிக் கருத்தான் அகத்து ஒடுங்க”

என்கிறார்.

மடலூர்வோர் செஞ்சடை விரித்தும், வெண்பொடி பூசியும் எருக்கங்கண்ணி சூடியும் வருதலை இவர், சிவபெருமானின் இயற்கைக் கோலத்தோடு இயைத்துக் காட்டுவர்.” அகப்பொருளிலக்கணம் கூறும் சேரிப்பரத்தை, காமக்கிழத்திகளை முறையே ஆணவம், சுத்தவித்தைகளாக உருவகித்துக் கூறுவர்.”

தலைவன் குறிப்பறிதல் துறையில் பாடும் மூன்று பாடல்கள், தலைவியின் கலம் பாராட்டியும், பாங்கனுக்குத் தலைவியினது இயலிடம் கூறியும், தலைவியை முன்னிலையாக்கித் தன்ங்லை கூறுத லும், மடலேறுவான் என்றலும், பொருள் முற்றி மீளும் தலைவன் இடைச்சுரத்தில் தலைவியின் உருவெளிப்பாடு கண்டு கூறுதலும், மேகத்தோடு கூறுதலும், பாங்கனோடு உரைத்தலும், பள்ளியிடத் தழுங்கலும் ஆகிய தலைவன் கூற்றுப் பாடல்களைக் குமரகுருபரர் பாடியுள்ளார்.