பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 207

தலைவனது வரவை எதிர்கோக்கித் தலைவி கடற் சுழியிழைத்துப் பார்த்தல், மடலேறுவதாகக் கூறல், பரத்தையிற் பிரிந்த தலைவனிடமிருந்து வந்த பாணனை நோக்கிக் கூறல் ஆகிய தலைவி கூற்றுப் பாடல்களையும் குமரகுருபரர் பாடியுள்ளார்.

தலைவன் ககுதல், தலைவனே மனம் செய வேண்டல், மடலேறப் புகின் அவள் அவயம் எழுத அரிதெனல், தலைவி கையுறை ஏற்றதை அறிவுறுத்தல் ஆகிய தோழி கூற்றுப் பாடல்களும்

உள் ளன.

தலைவியின் விரகதாபப் பாடல்கள் குமரகுருபரர் பிரபந்தங்களில் மிகுதி. அவள் பிறை கண்டு அஞ்சல், மன்மதனுக்குஅஞ்சல்,குயில் முதலியவற்றிற்கு அஞ்சல் பருவம் கண்டு அஞ்சல், ஊனின்றியும் துயிலின்றியும் வாடி அழுதல், பசலை மிகுதல், அாதுவிடுத்தல் முதலிய அகப் பொருட் பாடல்களைக் குமரகுருபரர் பாடியுள்ளார்.

புறத்திணை

போர் செய்யப் புகுவார், பகை வேந்தனது ஆநிரையைக் கோடல் தமிழ் மரபு. கிரைகோடற் புகு முன் கற்சொல்லாகிய நிமித்தம் பார்த்தலும், ஒற்றரைக் கொண்டு பகைவர் கிலை, கிரையின் கிலை முதலிய வற்றை ஆய்தலும் வழக்கம். இவற்றைக் கூறும் செய்யுட்களை வெட்சித்தினையில் முறையே விரிச்சி, வேய் என்னும் துறையிலடக்குவர் புறப்பொருள் வெண்பாமாலை யுடையார். இத்துறைச் செய்தி

களை,