பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 வாழ்வியல் நெறிகள்

வேய்ச்சொற் றொக்க வாய்ச்சொற் போல

விரிச்சியிற் கொண்ட விரைத்திற நோக்கி வினைமேற் செல்லுநர் பலரே யனையர்க்(கு) கவ்வினை முடிவதுஉங் காண்டும்’

என்று குமரகுருபரர் கூறியுள்ளார்.

மறவர் மகளைக் கொள்ள எண்ணி ஒரரசன் ஆாதுவிட அத்துாதனை இகழ்ந்து மறுக்கும் செய்தி யைக் கூறுவதும், கலம்பக உறுப்பினுள் ஒன்றாக மறமென்று வழங்கப் பெறுவதுமாகிய இரண்டு செய்யுட்கள் இவர் பாடியுள்ளார். அவை மகட்பாற்

காஞ்சியின் பாற்படும்.49

போர்க் களத்தில் கவர்தமாடுதலும், கழுகு பக்தரிடுதலும், பேய்கள் தசையுணவு கொண்டு களித்தலும் இவர் பாடியுள்ளார். புறமுதுகிட்டோரைக் கொல்லாது விடுத்தல் தழிஞ்சியெனும் துறை ஆகும். போக்களத்துப் பின்னிட்டோரை முருகக் கடவுள் கொள ளாமல் விடுவதைக் குமரகுருபரர் பாடியுள்ளார்.

‘ வென்றோர் வாகை முடிப்பதை

H. H. T. H. H. T. H. H. ..” பானுப் பகைவன் முதலாய பாலருடன் சிங்க முகனை வென்று வாகை முடித்தோய்.’

எனப் பாடியுள்ளார்.

அகத்தினை, புறத்தினை இலக்கணங் களை அறிந்தவரான குமரகுருபரர், தம் பிரபந்தங்களில் எடுத்துக் கொண்ட முதற்பொருளாம் இறைப் பொருள் சிறக்க, துணைப் பொருளாய் அவற்றை எடுத் தாண்டிருக்கிறார்.